மேலும்

நாள்: 24th July 2016

கொழும்புத் துறைமுகத்தில் ஜப்பானியப் போர்க்கப்பல்கள்

ஜப்பானியக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் இன்று கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வந்துள்ளன. இனாசுமா, சுசுற்சுகி ஆகிய பெயர்களைக் கொண்ட ஜப்பானியப் போர்க்கப்பல்களே கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

கொழும்பில் பாகிஸ்தானியர்களின் ஆர்ப்பாட்டம் – சிறிலங்காவிடம் இந்தியா எதிர்ப்பு

சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தானியர்கள் கடந்த வாரம் கொழும்பிலுள்ள ஐ.நா பணியகம் முன்பாக, இந்திய அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொண்ட போராட்டம் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார, கொமன்வெல்த் பணியக இணை அமைச்சராக அலோக் சர்மா நியமனம்

பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள தெரெசா மே, ஆசிய – பசுபிக் விவகாரங்களைக் கையாளும், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலோக் சர்மாவை நியமித்துள்ளார்.

சீன வெளிவிவகார அமைச்சரின் பயணம் இரகசியமாக வைக்கப்பட்டது ஏன்?- உபுல் ஜோசப் பெர்னான்டோ

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலின்  சிறிலங்கா நோக்கிய அவசர பயணமானது எவ்வித நோக்கமுமற்றது எனக் கருத முடியாது. ஏனெனில்  பிஸ்வாலின் இராஜாங்கத் திணைக்களம் மைத்திரி – ரணில் அரசாங்கம் தொடர்பாக அண்மைய சில மாதங்களாகப் பெற்றுக் கொண்ட அறிக்கைகள் பாராட்டத்தக்கவையாக இருக்கவில்லை.

வடக்கு மீள்குடியேற்றச் செயலணிக்கு 4 இணைத்தலைவர்கள் – வடமாகாணசபை மீண்டும் புறக்கணிப்பு

சிறிலங்கா அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் உருவாக்கப்பட்ட வடமாகாண மீள்குடியேற்ற செயலணியை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நான்கு இணைத்தலைவர்களைக் கொண்டதாக விரிவாக்கியுள்ளார்.

கைது செய்யப்படவுள்ளார் கோத்தா?

இன்னும் இரண்டு மாதங்களுக்குள் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்தவை மீண்டும் பதவிக்குக் கொண்டு வர முயற்சி – ஊடகங்கள் மீது பாய்கிறார் ரணில்

மகிந்த ராஜபக்சவை மீண்டும் பதவிக்குக் கொண்டு வரும் நோக்கில் சில அச்சு ஊடகங்கள் செயற்பட்டு வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.