மேலும்

மாதம்: July 2016

நாளை பிரித்தானியா புறப்படுகிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். பிரித்தானியாவின் ஸ்ராபோர்ட்சியர் பல்கலைக்கழகத்தில் கற்று வந்த தனது புதல்வி தரணியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் லண்டன் செல்லவுள்ளார்.

நாமல் ராஜபக்ச இன்று கைது செய்யப்படுவார்?

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும், கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் படைக்குறைப்பு நடக்கவில்லை – மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாதுகாப்பு எந்த வகையிலும் குறைக்கப்படவில்லை என்று, யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் பெயர் பொறித்த நினைவுக்கல்லை அடித்து நொருக்கினார் விகாராதிபதி

மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வர மறுத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீது கொண்ட கோபத்தினால், அந்த விகாரையில் இருந்த சிறிலங்கா அதிபரின் பெயர் பொறித்த நினைவுக் கல்லை அடித்து நொருக்கி ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார் விகாராதிபதி.

ஜிஎஸ்பி வரிச் சலுகையை மீள வழங்குவதற்கு சிறிலங்காவுக்கு 16 நிபந்தனைகள்

சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி வரிச் சலுகையை மீள வழங்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியம் 16 நிபந்தனைகளை விதித்துள்ளதாக, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு விமான நிலையத்தை திறந்து வைத்தார் சிறிலங்கா அதிபர்

புனரமைப்புச் செய்யப்பட்ட மட்டக்களப்பு உள்நாட்டு விமான நிலையத்தின் ஓடுபாதையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று திறந்து வைத்தார்.

சிறிலங்காவுக்கு அடுத்தடுத்துப் படையெடுக்கும் முக்கிய நாடுகளின் உயர்நிலைப் பிரமுகர்கள்

உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் உயர்மட்டப் பிரமுகர்கள் அடுத்தடுத்து சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதால் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது.

இந்தவாரம் கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய எதிர்ப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் போர் விமானங்களை வாங்குகிறது சிறிலங்கா

சிறிலங்கா விமானப்படைக்கு பாகிஸ்தானிடம் இருந்து பத்து ஜே.எவ்-17 போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாக, விரைவில் முடிவெடுக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் பொறிமுறையில், அனைத்துலக பங்களிப்பு அவசியம் – பிரித்தானியா

சிறிலங்காவில் உருவாக்கப்படும் பொறுப்புக்கூறல் பொறிமுறையில், அனைத்துலக பங்களிப்பு இருக்க வேண்டும் என்று பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார்.