மேலும்

நாள்: 25th July 2016

பாகிஸ்தான் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் – சிறிலங்காவுக்கு இந்தியா எச்சரிக்கை

கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் முன்பாக கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் தூதரகத்தின் ஏற்பாட்டில்,  காஷ்மீர் தொடர்பாக இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டமை தொடர்பாக, சிறிலங்காவிடம் இந்தியா அதிகாரபூர்வமற்ற வகையில் கவலை தெரிவித்துள்ளது.

வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுப்போம்- கனேடியப் பிரதமர்

உண்மையான அமைதியைக் கொண்டுவர, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கத்துக்கு கனடா தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுக்கும் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.

மகிந்தவை மட்டுமல்ல, மனித உரிமை குற்றச்சாட்டுகளையும் தோற்கடித்தேன் – மார்தட்டுகிறார் மைத்திரி

அதிபர் தேர்தலில் தாம் மகிந்த ராஜபக்சவை மட்டும் தோற்கடிக்கவில்லை என்றும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா எதிர்கொண்ட குற்றச்சாட்டுகளையும் வெற்றிகரமாகத் தோற்கடித்ததாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

மகிந்தவின் அறிக்கை சட்டஆட்சி மீதான மோசமான தாக்குதல் – ஆசிய மனித உரிமை ஆணையம்

காணாமற்போனோர் செயலகம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கை சட்டஆட்சியின் மீது தொடுக்கப்பட்டுள்ள மோசமான தாக்குதல் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை பொருளாதார முதலீட்டு வலய திட்டம் – சீனாவுடன் பேச்சுக்கள் ஆரம்பம்

அம்பாந்தோட்டையில் 10 பில்லியன் டொலர் பொருளாதார முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக சீன முதலீட்டாளர்களுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.

காணாமற்போனோர் செயலகம் குறித்த சட்டமூலம் – மகிந்த அணியைச் சாடும் கொழும்பு ஊடகம்

மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி இழைத்த தவறினால், சிறிலங்கா அரசாங்கம் காணாமற்போனோர்  தொடர்பான பணியகத்தை உருவாக்கும் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன்  நிறைவேற்றும் நிலை ஏற்பட்டிருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று விசனம் வெளியிட்டுள்ளது.

ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை ஆரம்பிக்கிறது சிறிலங்கா

ஈரானிடம் இருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு சிறிலங்கா தயாராக இருப்பதாக, சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

நேற்றுமாலை கொழும்புத் துறைமுகம் வந்தது அமெரிக்கப் போர்க்கப்பல்

அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துத் தள போர்க்கப்பலான, யுஎஸ்எஸ். நியூ ஓர்லியன்ஸ் நேற்றுமாலை சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.