மேலும்

மாதம்: July 2016

பங்களாதேஸ் விடுதியில் ஆயுததாரிகள் தாக்குதல் – இரு இலங்கையர்களும் சிறைபிடிப்பு

பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் உள்ள விடுதி ஒன்றில் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு இலங்கையர்களும் பணயக் கைதிகளாகச் சிக்கியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவின் கடல் பாதுகாப்பு ஆற்றலை வலுப்படுத்த 2.4 பில்லியன் ரூபாவை வழங்குகிறது ஜப்பான்

கடல்சார்  பாதுகாப்பு ஆற்றலை முன்னேற்றும் திட்டத்தின் கீழ், சிறிலங்காவுக்கு 2.4 பில்லியன் ரூபாவை ஜப்பான் கொடையாக வழங்கியுள்ளது.

பெருநகர அபிவிருத்தித் திட்டத்தில் இந்திய நிறுவனங்களை உள்ளீர்க்க சிறிலங்கா விருப்பம்

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணம் முழுவதையும் உள்ளடக்கி 15 ஆண்டுகள் இலக்குடன் 44 பில்லியன் அமெரிக்க டொலரில் மேற்கொள்ளும் பெருநகர அபிவிருத்தித் திட்டத்திற்குள் இந்தியாவின் உயர் மட்ட நிறுவனங்களான டாடாஸ் (Tatas) மற்றும் இன்போசிஸ் (Infosys) ஆகியவற்றை உள்ளீர்க்க சிறிலங்கா விருப்பம் வெளியிட்டுள்ளது.

எட்கா உடன்பாடு சிறிலங்காவின் பொருளாதாரத்துக்கு கைகொடுக்கும் – இந்திய நிபுணர்கள்

இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை (எட்கா) சிறிலங்கா நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இது சிறிலங்காவின் பொருளாதார நலன்களுக்கு ஆதரவாக இருக்கும் எனவும் அனைத்துலக உறவுகள் தொடர்பான இந்திய வல்லுனர்களின் சுயாதீனக் குழு ஒன்று வலியுறுத்தியுள்ளது.