மேலும்

கண்டியில் தலாய்லாமா குறித்த கண்காட்சி – சீனா அதிருப்தி

dalailama-meet-sl-monksசீன வெளிவிவகார அமைச்சரின் சிறிலங்கா பயணத்துக்கு முன்னதாக, கடந்த புதன்கிழமை தலாய்லாமா தொடர்பான ஒளிப்படக் கண்காட்சி ஒன்று கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியின் சிறிலங்கா பயணத்துக்கு இரண்டு நாட்கள் முன்னதாக கண்டியில் தலாய்லாமா தொடர்பான ஒளிப்பட கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டமை தொடர்பாக சீனா ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஆங்கில நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பாக தாம் எதையும் அறியவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே இந்திய ஊடகம் ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சீனா உறுதியாக எதிர்த்து வரும், தலாய்லாமாவுக்கு சிறிலங்கா பல்வேறு சந்தர்ப்பங்களில் நுழைவிசைவு மறுத்து வரும் நிலையில், தலாய்லாமா தொடமர்பான ஒளிப்படங் காட்சி நடத்தப்பட்டமை சீனாவுடனான உறவுகளுக்கு மறைமுக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா – சீன சமூக கலாசார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு அந்த அமைப்பு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *