மேலும்

நாள்: 21st July 2016

பாதுகாப்பு விவகாரங்களை ஆய்வு செய்ய புதிய நிறுவகத்தை அமைக்கிறது சிறிலங்கா

பாதுகாப்பு விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக சிந்தனைக் குழாம் ஒன்றை உள்ளடக்கிய ஆய்வு அமைப்பு ஒன்றை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உருவாக்கியுள்ளது.

இந்த ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட வரி வருமானம் கிடைக்கவில்லை – சிறிலங்கா அரசு தகவல்

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும், குறைவாகவே வரி வருமானம் கிடைத்திருப்பதாக, சிறிலங்காவின் நிதி அமைச்சர் சார்பில் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்கா படைகளைத் தண்டிக்கவே காணாமற்போனோர் பணியகம் – மகிந்த குற்றச்சாட்டு

சிறிலங்கா அரசாங்கத்தினால் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காணாமற்போனோருக்கான பணியகம், சிறிலங்காப் படையினரைத் தண்டிப்பதற்கான ஒன்று எனக் குற்றம்சாட்டியுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, இதனை உருவாக்குவதற்குத் துணைபோகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டையும் படையினரையும் காட்டிக் கொடுத்ததற்குப் பொறுப்பேற்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

ரவிராஜ் படுகொலை– 7 பேருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், 7 சந்தேகநபர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் முக்கிய கூட்டம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியதாக 13 பேருக்கு எதிராக சுவிசில் வழக்கு

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக, மில்லியன் கணக்கான டொலர்களை திரட்டினார்கள் என்று, விடுதலைப் புலிகளின் 13 செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.