மேலும்

நாள்: 13th July 2016

ரூபவாஹினி சமையல் நிகழ்ச்சியில் நிஷா பிஸ்வால்

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், சிறிலங்காவின் அரச தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் இன்று பங்கேற்றார்.

தகவல் உரிமைச் சட்டத்தை சாத்தியமாக்கியதற்கு நிஷா பிஸ்வால் பாராட்டு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டமைக்கு, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் பாராட்டுத் தெரிவித்தார்.

பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும் – ஐ.நா

பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் பொறிமுறை நம்பிக்கை அளிப்பதாக இருக்க வேண்டும் – அமெரிக்கா

பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் பொறிமுறை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்க வேண்டியது அவசியம் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம், அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்கள் நிஷா பிஸ்வால் மற்றும் ரொம் மாலினொவ்ஸ்கி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பரணகமவின் அதிமேதாவித்தனமும் கொத்தணிக் குண்டு சர்ச்சையும்

காணாமற் போனோர் தொடர்பாக விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகமவினால் கடந்த வாரம் விடுக்கப்பட்ட அறிக்கையானது போர்க் காலத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் புதியதொரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வெளிநாட்டுப் பங்களிப்பு என்பது வெளிநாட்டு நீதிபதிகள் அல்லவாம் – மங்கள சமரவீர குத்துக்கரணம்

விசாரணைப் பொறிமுறைகளில் வெளிநாட்டுப் பங்களிப்பைப் பெறுவதென்பது, வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதாக அர்த்தமாகாது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

அமெரிக்க உதவிச் செயலர்கள் சிறிலங்கா பிரதமர், பாதுகாப்புத் தரப்புடன் பேசவுள்ளனர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர்களான நிஷா பிஸ்வால் மற்றும் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர் இன்று சி்றிலங்கா பிரதமரையும், பாதுகாப்புத் தரப்பினரையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.

சிறிலங்காவில் நடப்பதை உலகம் கவனிக்கிறது – ரொம் மாலினோவ்ஸ்கி

சிறிலங்காவில் என்ன நடக்கிறது என்பது உலகம் முழுழுவதிலும் உள்ள மக்களுக்கு முக்கியமான விடயமாக இருக்கிறது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர், ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்தார்.

நல்லிணக்கச் செயல்முறைகளில் சிறிலங்காவின் பங்காளராக இணைந்திருப்போம் – நிஷா பிஸ்வால்

போருக்குப் பிந்திய நல்லிணக்க செயல்முறைகளை சிறிலங்கா முன்நோக்கி நகர்த்துவதற்கு, அதன் பங்காளராக இணைந்திருப்பதில் அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்தார்.

இன்று காலை கூட்டமைப்பை சந்திக்கின்றனர் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்கள்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர்கள் நிஷா பிஸ்வால் மற்றும் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர் இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.