மேலும்

மாதம்: August 2016

சிறிலங்கா இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் றொசான் செனிவிரத்ன நியமனம்

சிறிலங்கா இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் றொசான் செனிவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (30.08.2016) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

கோத்தாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் பெறுமதியான பாடங்களை கற்றுக்கொண்டேன் – எரிக் சொல்ஹெய்ம்

சிறிலங்காவின் அமைதி முயற்சிகளில் ஈடுபட்டதன் மூலம், தாம் பெறுமதியான பாடங்களைக் கற்றுக்கொண்டதாக, நோர்வேயின் முன்னாள் சமாதான ஏற்பாட்டாளரான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து சிறிலங்காவுடன் பேசுவார் பான் கீ மூன்

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் உள்நாட்டு பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நாவுடன் இணைந்து அமைதியைக் கட்டியெழுப்பும் நிதியத்தை உருவாக்க சிறிலங்கா முயற்சி

சிறிலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான பல பில்லியன் டொலர் நிதியத்தை உருவாக்குவது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வடக்கு முதல்வரைத் தனியாகச் சந்திப்பார் பான் கீ மூன்?

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நாளை மறுநாள் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளும் போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாளை சிங்கப்பூர் செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்து சமுத்திர கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நாளை சிங்கப்பூருக்குப் பயணமாகவுள்ளார்.

இன்று பிற்பகல் கொழும்பு வருகிறார் ஐ.நா பொதுச்செயலர்

சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மூன்று நாள் பயணமாக இன்று பிற்பகல் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

200 புலிகளைத் தப்பிச் செல்லவிட்ட சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் அதிகாரி

முன்னைய ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவருக்கு பணத்தைக் கொடுத்து, 200 வரையான விடுதலைப் புலிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கனகராயன்குளத்தில் மர்மநபர்களால் சேதமாக்கப்பட்ட புத்தர்சிலை

வவுனியா- கனகராயன்குளத்தில் சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினரால் கைவிடப்பட்ட முகாமில், அமைக்கப்பட்டிருந்த புத்தர்சிலை நேற்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.