மேலும்

மாதம்: May 2016

அமெரிக்க நாடாளுமன்றக் குழு சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கும், சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கும் இடையிலான, ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க நாடாளுமன்றக் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.

வவுனியா ஜோசப் இராணுவ முகாமுக்குள் நுழைந்து ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சோதனை

சிறிலங்கா வந்துள்ள ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஜுவான் மென்டஸ் நேற்றுமுன்தினம் வவுனியா ஜோசப் இராணுவ முகாமில் சோதனைகளை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர் விபத்தில் மரணம்

மட்டக்களப்பு- வாழைச்சேனையில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர், உந்துருளி விபத்தில் மரணமானார். இந்தச் சம்பவம் கடந்த மாதம் 29ஆம் நாள் இரவு இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொகோஸ் தீவு வந்த சிறிலங்கா அகதிகளை இரகசியமாகத் திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா

சிறிலங்காவில் இருந்து அவுஸ்ரேலியாவின் கொகோஸ் தீவைச் சென்றடைந்த படகில் இருந்த அகதிகள், இரவோடிரவாக இரகசியமான முறையில், விமான மூலம் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு

இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான சிறிலங்கா இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா இன்று இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.

அடுத்தவாரம் பிரித்தானியா, இந்தியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் பிரித்தானியா மற்றும் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு  அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கோத்தாவின் திடீர் அமெரிக்கப் பயணத்தின் இரகசியம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

தான் அமெரிக்காவிற்குச் சென்றால் அங்குள்ள புலி ஆதரவு அமைப்புக்கள் தனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் என ஒருதடவை கோத்தபாய தெரிவித்திருந்தார். அமெரிக்கச் சிறையில் அடைக்கப்படுவதை விட சிறிலங்காவில் இருப்பது சிறந்தது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மோதலில் ஈடுபட்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு வாரகாலம் இடைநிறுத்தம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதல்களுக்குக் காரணமானவர்கள் என்ற குற்றச்சாட்டில், பிரதி அமைச்சர் பாலித தேவாரப்பெருமவும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவும், ஒரு வாரகாலம் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மேஜர் ஜெனரல் மானவடுவுக்கு 3 மணி நேர சத்திரசிகிச்சை

சிறிலங்கா இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவுத் தளபதியான மேஜர் ஜெனரல் சுமித் மானவடுவுக்கு  நரம்பியல் நிபுணரின் உதவியுடன் மூன்று மணிநேர அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு நிறுவன உதவியுடன் திருகோணமலையில் பெருநகர திட்டமிடல் ஆய்வு

திருகோணமலைப் பெருநகரப் பிரதேசத்தில், வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் திட்டமிடல் மீளாய்வு ஒன்றை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.