மேலும்

நாள்: 28th May 2016

விக்னேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா கடிதம் – “விரைவில் சந்திப்போம்”

இலங்கைத் தமிழர்கள் உரிய நீதியைப் பெறும் வகையில் இந்திய அரசின் மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பேன் என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பியுள்ள நன்றிக் கடிதத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது – சிறிலங்காவுக்கு இந்தியா கண்டிப்பான அறிவுறுத்தல்

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தக்கூடாது என்று சிறிலங்கா அரசுக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்தார்.

மன்னிப்புக் கோருமாறு கிழக்கு முதல்வருக்கு சிறிலங்கா அதிபர் உத்தரவிட வேண்டுமாம்

பொது இடத்தில் அவமதிப்புச் செய்தமைக்காக, கடற்படை கப்டன் பிரேமரத்னவிடம், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீட் அகமட்டை மன்னிப்புக் கோருமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட வேண்டும் என்று, முன்னாள் கடற்படை அதிகாரியான றியர் அட்மிரல் எச்.ஆர்.அமரவீர வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவுக்கு 38 பில்லியன் யென் கடனுதவி வழங்குகிறது ஜப்பான்

சிறிலங்காவுக்கு 38 பில்லியன் யென் அதிகாரபூர்வ அபிவிருத்தி உதவிக் கடனை வழங்குவதற்கு ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் செல்கிறார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, வரும் ஜூன் 9ஆம் நாள் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவருடன் கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலரும் ஜப்பான் செல்லவுள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுத்திகரிப்பு பணியில் அமெரிக்கப் படையினர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமெரிக்க படையினரின் குழுவொன்றும் சுத்திகரிப்புப் பணியில் நேற்று ஈடுபட்டது.

சம்பூர் சம்பவம் ஜி-7 மாநாட்டை இலக்கு வைத்து நடத்தப்பட்ட நாடகமா? – விசாரணைக்கு உத்தரவு

சம்பூரில் நடந்த சம்பவம், ஜி-7 மாநாட்டை இலக்கு வைத்து, முன்னரே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றா என்பது குறித்து விசாரணை செய்யுமாறு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முப்படைகளின் தளபதிகளிடமும் கோரியுள்ளார்.

கிழக்கு முதல்வர் மீதான தடை தொடரும் – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சிறிலங்கா கடற்படை அதிகாரியை அவமதித்த கிழக்கு மாகாண முதலமைச்சர், நசீர் அகமட் மீது விதிக்கப்பட்டுள்ள கடற்படையின் தடை தொடரும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு மத்தியில் கிழக்கு கடற்படைத் தளபதி கொழும்புக்கு இடமாற்றம்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், கடற்படை அதிகாரி ஒருவரைத் திட்டிய விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதியான றியர் அட்மிரல் நீல் ரொசாரியோ கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கருணாநிதி செய்ய வேண்டிய கடைசி அறுவை சிகிச்சை

தோல்விகளால் வீழாத அறிவாலயம், இன்று துவண்டு கிடக்கிறது. இது திமுகவின் தலைமை அதிகாரத்துக்கான யுத்தம் ஏற்படுத்தியிருக்கும் கலக்கம். கட்சித் தலைவர் கருணாநிதியைச் சந்தித்த பலரும் உடைந்து அவரிடம் அழுததாகவும் அவர் தேற்றியதாகவும் சொல்கிறார்கள்.