மேலும்

நாள்: 22nd May 2016

கள மருத்துவமனை, மருத்துவர்களை சிறிலங்காவுக்கு அனுப்புகிறது பாகிஸ்தான்

வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு, 30 படுக்கைகளைக் கொண்ட நவீன கள மருத்துவமனையையும், நிவாரணப் பொருட்களையும், பாகிஸ்தான் அனுப்பவுள்ளது.

மேலும் 5 சடலங்கள் இன்று மீட்பு – பலியானோர் தொகை 87 ஆக உயர்வு

கேகாலை மாவட்டத்தில் உள்ள அரநாயக்கவில், கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்துபோன 5 பேரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.

மீண்டும் முதல்வராகும் ஜெயலலிதாவுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் வாழ்த்து

தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் முதலமைச்சராக நாளை பதவியேற்கவுள்ள, ஜெயலலிதாவுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஒரு முன்னாள் இந்திய இராஜதந்திரியின் யாழ்ப்பாணப் பயணம்

சீனாவானது கொழும்பு மற்றும் சிறிலங்காவின் பிற இடங்களில் நிலைத்திருப்பதால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எவ்வித சவால்களும் ஏற்படாது என்பது தெளிவாக நோக்கப்பட வேண்டிய நிலை காணப்படும் அதேவேளையில் இந்தியாவும் திருகோணமலையில் தனது நிலையைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து முன்னெடுக்கப்படும் சம்பூர் அனல்மின் திட்டப் பணிகள்

சம்பூர் அனல் மின் திட்டப் பணிகளை நிறுத்துவதற்கோ, இயற்கை எரிவாயு மின் திட்டமாக மாற்றுவதற்கோ, இந்தியாவின் அரசுத்துறை நிறுவனமான தேசிய அனல்மின் கழகம், எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இராட்சத விமானத்தில் 50 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்கள் வந்தன

சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய விமானப்படையின் இராட்சத போக்குவரத்து விமானத்தில் எடுத்து வரப்பட்ட உதவிப் பொருட்கள், சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் கையளிக்கப்பட்டது.

அரநாயக்க மீட்புப்பணிகளை நிறுத்தியது சிறிலங்கா இராணுவம் – 141 பேரின் கதி தெரியவில்லை

கேகாலை மாவட்டத்தில் உள்ள அரநாயக்க பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்து போன மூன்று கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதலை சிறிலங்கா இராணுவம் நிறுத்தியுள்ளது.