மேலும்

நாள்: 23rd May 2016

முன்னாள் பிரதிகாவல்துறை மா அதிபர் அனுர சேனநாயக்க கைது

சிறிலங்கா காவல்துறையின், முன்னாள் மூத்த காவல்துறை மா அதிபர், அனுர சேனநாயக்க இன்று, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆறாவது தடவையாக முதலமைச்சராகப் பதவியேற்றார் ஜெயலலிதா

தமிழ்நாடு முதலமைச்சராக- ஆறாவது தடவையாக, செல்வி ஜெயலலிதா இன்று நண்பகல் பதவியேற்றார். சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், கோலாகலமாக நடந்த நிகழ்வில், மாநில ஆளுனர் ரோசய்யா முன்னிலையில், ஜெயலலிதா பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஜெயலலிதாவின் வெற்றி சிறிலங்காவுக்கு ஆபத்து – கலாநிதி வசந்த பண்டார

தமிழ்நாட்டில், முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது, சிறிலங்காவுக்கு ஆபத்தானது என்று, தேசப்பற்று தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. 

நாளை மறுநாள் ஜப்பானுக்குப் புறப்படுகிறார் சிறிலங்கா அதிபர்

ஜப்பானில் நடக்கவுள்ள ஜி-7 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை மறுநாள், ரோக்கியோவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

இன்றும் மீண்டும் முதல்வராகப் பதவியேற்கிறார் ஜெயலலிதா – வாழ்த்த வருவாரா கருணாநிதி?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா, இன்று ஆறாவது தடவையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பணியில் இந்தியக் கடற்படை மருத்துவக் குழுக்கள்

கொழும்பு மற்றும் கம்பகா மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து, இந்தியக் கடற்படை மருத்துவக் குழுக்களும், மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படையெடுக்கும் அரசியல்வாதிகளால் நெருக்கடி

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் படையெடுக்கும் அரசியல்வாதிகளால், மீட்பு மற்றும் உதவிப் பணிகளை முன்னெடுப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் 2.5 இலட்சம் டொலர்களை வழங்குகிறது அமெரிக்கா

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா மேலும் இரண்டரை இலட்சம் டொலர்களை (38 மில்லியன் ரூபா) வழங்குவதாக அறிவித்துள்ளது.