மேலும்

நாள்: 21st May 2016

25 மெட்ரிக் தொன் உதவிப்பொருட்களுடன் கொழும்பு வந்தது இந்தியப் போர்க்கப்பல்

சிறிலங்காவில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தியா அனுப்பி வைத்த அவசர நிவாரண உதவிப்பொருட்களை ஏற்றிய ஐஎன்எஸ் சுனைனா என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

அரநாயக்க பகுதியில் மீண்டும் நிலச்சரிவு

கேகாலை மாவட்டம் அரநாயக்க பகுதியில் இன்று பிற்பகல் மீண்டும் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இரண்டு ரேடர் விமானங்களை சிறிலங்காவுக்கு வழங்குகிறது ஜப்பான் – உதவிப் பொருட்களும் வந்தன

சிறிலங்காவில் அனர்த்தகால மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக இரண்டு ரேடர் விமானங்களை அன்பளிப்பாக வழங்குவற்கு ஜப்பான் முன்வந்துள்ளது.

மீட்புக் குழுக்களையும் கொழும்புக்கு அனுப்பியது இந்தியா

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிபுணர் குழுக்களையும் இந்தியா கப்பல்கள் மற்றும் விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது.

மைத்திரியைச் சந்தித்தார் ஜப்பானிய பிரதமரின் சிறப்புத் தூதுவர்

ஜப்பானில் அடுத்த வாரம் நடக்கவுள்ள ஜி-7 உச்சி மாநாட்டில், பங்கேற்கவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபேயின், சிறப்புப் பிரதிநிதி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

மகிந்தவின் உகண்டா அழைப்புக்குப் பின்னால் உள்ள இரகசியம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

கடந்த வார இறுதியில் மங்கள சமரவீர, மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்தத்திறந்த மடலில், போர்க் காலத்தில் பல்வேறு யுத்த மீறல்கள் இடம்பெற்றதாக மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருந்தார். போர் மீறல்கள் தொடர்பாக மகிந்த மீது மங்கள குற்றம் சுமத்தியிருந்த வேளையில், மகிந்த உகண்டாவிற்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியிருந்தார்.