தமிழ்நாட்டில் அமையுமா கூட்டணி ஆட்சி?
தமிழகத் தேர்தல் களத்தில் இன்றைக்கு உரத்து ஒலிக்கும் முக்கியமான கோரிக்கை, கூட்டணி ஆட்சி. ஆளுங்கட்சியான அதிமுக அதைப் பற்றிப் பேசுவதே இல்லை. திமுகவோ அதற்கான வாய்ப்பை அடியோடு நிராகரிக்கிறது. தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா தரப்போ கூட்டணி ஆட்சிதான் தமிழகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான ஆகச் சிறந்த நிவாரணி என்கிறது.