மேலும்

நாள்: 26th May 2016

1.1 கிலோ தங்கத்துடன் சிக்கினார் மகிந்தவின் இணைப்புச் செயலாளர்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் முன்னாள் இணைப்புச் செயலாளரான சம்பிக்க கருணாரத்ன, 1.1 கிலோ தங்கத்துடன், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்கவில் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர் ஆதவன் மாஸ்டர் கைது

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளார்களில் ஒருவரான, ஆதவன் மாஸ்டர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து தீவிரவாத விசாரணைப் பிரிவினரால், கைது செய்யப்பட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

படைத்தளங்களுக்குள் நுழைய கிழக்கு முதல்வருக்கு தடை – முப்படைகளும் போர்க்கொடி

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், முப்படைகளினதும் தளங்களுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

கிழக்கு முதல்வரின் குற்றச்சாட்டை மறுக்கிறார் ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ

கிழக்கு மாகாண ஆளுனர் நெறிமுறைகளை அறியாது செயற்படுவதாகவும், தனது பணிகளில் தலையீடு செய்வதாகவும், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை, கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ நிராகரித்துள்ளார்.

ஆளுனரின் தவறுகளே பிரச்சினைக்கு காரணம் – கிழக்கு மாகாண முதலமைச்சர் குற்றச்சாட்டு

சம்பூர் மகாவித்தியாலயத்தில் நடந்த சம்பவத்துக்கு ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோவின் தவறுகளே காரணம் என்று, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் திட்டிய விவகாரம் – கடற்படையின் அறிக்கை சிறிலங்கா அதிபரிடம்

சம்பூரில் நடந்த விழாவில், சிறிலங்கா கடற்படை அதிகாரியை, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் கடுமையாக திட்டிய விவகாரம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படை, பாதுகாப்பு அமைச்சிடம் செய்துள்ள முறைப்பாட்டை, சிறிலங்கா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளதாக பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் மெய்க்காவலர்களின் 72 வங்கிக்கணக்குகள் குறித்து விசாரிக்க அனுமதி

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின், மூன்று மெய்ப்பாதுகாவலர்களின்,  வங்கிக்கணக்குகள் மற்றும் நிதிநிறுவனக் கணக்குகள் தொடர்பாக விசாரணை செய்ய, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

காணாமற்போனோர் தொடர்பாக சிறப்புப் பணியகம் – சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம்

போர்க்காலத்தில், காணாமற்போனோர் தொடர்பான, விபரங்களை அறிந்து கொள்ளவும், தகவல்களை உறவினர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கும், சிறப்புப் பணியகம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.