மேலும்

நாள்: 29th May 2016

கிழக்கு முதல்வரை முகாம்களுக்குள் அனுமதியோம் – சிறிலங்கா கடற்படைத் தளபதி சூளுரை

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட்டை, எந்தவொரு முகாம்களுக்குள்ளேயும், நுழைவதற்கு அனுமதிக்கமாட்டோம். இந்த விடயத்தில் மிகத் தெளிவாக இருக்கிறோம் என்று, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் மீறல்களைக் குழிதோண்டிப் புதைக்க முயன்றவரா அடுத்த ஐ.நா பொதுச்செயலர்?

சிறிலங்காவில் இடம்பெற்ற பாரிய இனப்படுகொலை தொடர்பாக ஐ.நாவால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் கலந்து கொண்டமைக்குப் பழிதீர்க்கும் முகமாக, கிளார்க்கின் உயர் அதிகாரிகள் அவரைப் பதவியிலிருந்து விலக்கினார்கள்.

பங்களாதேஸ் பிரதமருடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு – டிசெம்பரில் டாக்கா செல்கிறார்

பங்களாதேஸ் தலைநகர் டாக்காவுக்கும், கொழும்புக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதுகாப்புச் செயலரின் ‘தடை’ உத்தரவால் சிறிலங்கா அரசுக்கு நெருக்கடி

தற்போதைய அரசாங்கத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள உத்தரவு தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், தனியான பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

நோர்வே இராஜாங்கச் செயலர் சிறிலங்கா வருகிறார் – யாழ்ப்பாணமும் செல்கிறார்

நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலர், ரோர் ஹற்ரெம்  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். நாளை மறுநாள் சிறிலங்கா வரும் அவர் ஜூன் 2ஆம் நாள் வரை இங்கு தங்கியிருப்பார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

புலிகள் தோன்றக் காரணமான பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை- சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா படையினர் வசமுள்ள தமது சொந்த நிலங்கள், மீள ஒப்படைக்கப்படும் என்று, தமிழர்கள் கடந்த 27 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு இரு ரோந்துப் படகுகளை வழங்குகிறது ஜப்பான்

கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, சிறிலங்காவுக்கு இரண்டு ரோந்துப் படகுகளை வழங்குவதற்கு ஜப்பான் முன்வந்துள்ளது.