மேலும்

நாள்: 10th May 2016

நாளை உகண்டா செல்கிறார் மகிந்த ராஜபக்ச

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நாளை உகண்டாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக, அவரது ஊடகப் பி்ரிவு அறிவித்துள்ளது.

லலித் அத்துலத்முதலியின் படுகொலை குறித்து மீள் விசாரணை செய்யக் கோருகிறார் சகோதரர்

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் படுகொலை தொடர்பாக புதிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு, அவரது சகோதரர் தயந்த அத்துலத்முதலி கோரிக்கை விடுத்துள்ளார்.

“என்னையும் மகிந்தவையும் திருக்கை வாலினால் அடிக்க வேண்டும்” – என்கிறார் கோத்தா

சரத் பொன்சேகாவை சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமித்தமைக்காக, தன்னையும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவையும், திருக்கை வாலினால் அடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

நாமல், யோசிதவிடம் தொடங்கியது விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மகன்களான நாமல் ராஜபக்சவிடமும், யோசித ராஜபக்சவிடமும், இன்று காலை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுதந்திரக் கட்சி முக்கிய தலைவர்களுடன் மைத்திரி இன்று அவசர சந்திப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் 10பேருடன், கட்சியின் தலைவரும் சிறிலங்கா அதிபருமான மைத்திரிபால சிறிசேன இன்று அவசர கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

நீண்டநேரம் உரையாடிய மைத்திரி – சம்பந்தன்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுடன் நேற்று நீண்டநேரமாக கலந்துரையாடினார்.

உலக வங்கியின் கறுப்புப்பட்டியலில் உள்ள சீன நிறுவனத்துடன் சிறிலங்கா அரசு உடன்பாடு

கொழும்பு துறைமுக நகரக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும், சீன நிறுவனம், உலக வங்கியால் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று பிரித்தானியா செல்கிறார் சிறிலங்கா அதிபர் – கமரூனிடம் உதவி கோருவார்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் பயணமாக இன்று இரவு பிரித்தானியாவுக்குச் செல்லவுள்ளார். நாளை மறுநாள் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள ஊழல் ஒழிப்பு தொடர்பான அனைத்துலக மாநாட்டில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன லண்டன் செல்லவுள்ளார்.

பனாமா ஆவணங்களில் சிக்கினார் கோத்தாவின் கூட்டாளி மேஜர் நிசங்க சேனாதிபதி

வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பனாமா ஆவணங்களில் இடம்பெற்றுள்ளவர்கள் பற்றிய மற்றொரு தொகுதி பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், சிறிலங்காவில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் நெருங்கிய சகாவான நிசங்க சேனாதிபதியின் பெயரும் அதில் இடம்பெற்றுள்ளது.