மேலும்

நாள்: 14th May 2016

குற்றச்செயல்கள் அதிகரிப்பை நியாயப்படுத்துகிறார் வடக்கு ஆளுனர் – முன்னரும் இப்படி நடந்ததாம்

வடக்கில் முன்னரும் குற்றச்செயல்கள் இடம்பெற்று வந்ததாகவும், ஆனால் போர்க்காலத்தில் ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும், தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே.

யாழ்ப்பாணத்தில் இம்முறை வெசாக் கொண்டாட்டங்களுக்கு பெரியளவில் ஏற்பாடு

இம்முறை யாழ்ப்பாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களை, பெரியளவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படைகளின் மே 18 போர் வெற்றி அணிவகுப்பு இந்த ஆண்டு இல்லை

போர் வெற்றி அணிவகுப்பு இந்த ஆண்டு நடத்தப்படாது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் சிறிலங்கா விமானப்படையின் கடல்-வான் மீட்பு ஒத்திகை

வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து சிறிலங்கா விமானப்படை, நேற்றுக்காலை கடல்-வான் மீட்பு ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளது.

மைத்திரியுடனான சந்திப்பு – மீனவர்கள் பிரச்சினைக்கே முக்கியத்துவம் அளித்தார் மோடி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று நடந்த இருதரப்புப் பேச்சுக்களில், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் விவகாரத்துக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக புதுடெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீட உயரதிகாரி சிறிலங்கா தளபதிகளுடன் பேச்சு

அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தின்,  மூலோபாய திட்டமிடல் மற்றும் கொள்கை பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஸ்டீவன் ருடர் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.