மேலும்

மாதம்: May 2016

சிறிலங்காவுக்கு வக்காலத்து வாங்கும் சமந்தா பவர் – அனைத்துலக ஊடகம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மையில் அதிகரித்துள்ள கைதுகள், கடத்தல்கள் போன்றன அமெரிக்காவிற்கு எச்சரிக்கை மணியை எழுப்ப வேண்டும். பத்தாண்டு காலத்தில் ராஜபக்சவால் இழைக்கப்பட்ட தமிழர் எதிர்ப்பு நடவடிக்கை மீண்டும் தற்போதைய ஆட்சியில் தொடர்கிறது என்கின்ற செய்தி அமெரிக்காவின் காதுகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

சாவகச்சேரி வெடிபொருளுடன் தொடர்புடையோர் இந்தியாவுக்கு தப்பினராம்

சாவகச்சேரியில் கடந்த மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களுடன் தொடர்புடைய சில சந்தேக நபர்கள், இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் – விரைவில் சீனாவுடன் உடன்பாடு

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக,  சீன முதலீட்டாளருக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான சலுகை உடன்பாடு விரைவில் கையெழுத்திடப்படும் என்று,  சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல் மாகாண  அபிவிருத்தி அமைச்சின் செயலர் நிகால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

16 வயது வரை சிறுவர்கள் பாடசாலை செல்வது கட்டாயம் – மீறும் பெற்றோருக்கு தண்டனை

சிறிலங்காவில் 5 வயதுக்கும், 16 வயதுக்கும் இடைப்பட்ட வயதுள்ள சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்வது கட்டாயமாக்கப்படவுள்ளது.  ஏற்கனவே, 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பாடசாலைக்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்றிருந்த கட்டளை, தற்போது, 16 வயது வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு நிதியளித்த சீன நிறுவனம் மீது வழக்கு

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த சிறிலங்கா அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைகளுக்கு நிதியளித்ததாக சீன நிறுவனத்தின் மீது நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளது.

ரணில் வழங்க முன்வந்த பிரிகேடியர் பதவியை சம்பந்தன் நிராகரிப்பு

சம்பந்தன் இராணுவத்தில் இணைய விரும்பினால் அவருக்கு பிரிகேடியர் கேணல் அல்லது கேணல் இன் சீவ் பதவியை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

மகிந்தவின் முகத்தில் அறைந்த சீனா – உபுல் ஜோசப் பெர்னான்டோ

சீன அதிபரின் இந்தக் கூற்றானது மகிந்தவை இலக்காகக் கொண்டதா அல்லது இல்லையா என்பது எமக்குத் தெரியாது. எனினும், சீனா இன்னமும் தனது கைக்குள் உள்ளது என சூளுரைத்த மகிந்தவின் கொட்டத்தை அடக்குவதற்காகவே சீன அதிபர் இவ்வாறானதொரு அறிவித்தலை விடுத்ததாக சிலர் கூறுகின்றனர்.

வடக்கில் பணியக உதவியாளர் பதவிக்கு 250 பட்டதாரிகள் விண்ணப்பம்

சிறிலங்காவில் வேலையற்றிருப்போர் எண்ணிக்கை கடந்த ஆண்டில் அதிகரித்துள்ள நிலையில், வடக்கு மாகாணசபையினால் கோரப்பட்ட பணியக உதவியாளர் பதவிக்கு, 250 பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர்த்தளபாடங்களை வாங்க ரஸ்யாவிடம் 400 மில்லியன் டொலர் கடன் கேட்கிறது சிறிலங்கா

ஆயுதப்படைகளுக்கான போர்த்தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கு, ரஸ்யாவிடம், 400 மில்லியன் டொலர் கடனுதவியை சிறிலங்கா கோரியுள்ளது.

பரபரப்பான சூழலில் சிறிலங்காவின் மே நாள் பேரணிகள் – பிளவுபடும் சுதந்திரக் கட்சி?

உலகத் தொழிலாளர் நாளான- இன்று சிறிலங்காவின் பிரதான கட்சிகளில் ஒன்றான சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பிளவுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.