மேலும்

நாள்: 4th May 2016

முன்னாள் போராளிகள் கைதுகளின் பின்னணி என்ன? – சிறிலங்கா அரசிடம் கூட்டமைப்பு கேள்வி

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதற்கான காரணங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

சங்கரி, டக்ளஸ், பிரபா புதிய அரசியல் கூட்டணி – முன்னாள் போராளிகள் கட்சியும் இணைவு

ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா, பிரபா கணேசன் உள்ளிட்டோர் இணைந்து, ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்ற பெயரில், புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

பாலித தேவாரப்பெருமவும், பிரசன்ன ரணவீரவுமே மோதல்களுக்கு காரணம்- விசாரணைக்குழு அறிக்கை

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மோதல்களுக்குக் காரணமான, ஐதேக உறுப்பினர் பாலித தேவாரப்பெரும மற்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு எதிராக, கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க, விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

தலையில் படுகாயங்களுடன் மேஜர் ஜெனரல் மானவடு கொழும்பு மருத்துவமனையில் அனுமதி

சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலறிப் படைப்பிரிவின் தளபதியான, மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, தலையில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் ஊடகப் பேச்சாளருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகரவுக்கு எதிராக, ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு மாகாணசபையின் தீர்மானத்தை நிராகரித்தது மேல் மாகாணசபை

வடக்கு-கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைத்து, சமஸ்டி ஆட்சி அலகு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கோரி, வடக்கு மாகாணசபையில் நிறைவேற்ப்பட்ட தீர்மானத்தை, மேல்மாகாணசபை நிராகரித்துள்ளது.

கோத்தா மீதான குண்டுத் தாக்குதல் வழக்கு – ஜூன் 27ஆம் நாள் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை, எதிர்வரும் ஜூன் 27ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமக்கெதிராகப் போர்க்கொடி உயர்த்தியவர்களைச் சரணடைய வைத்தார் சம்பந்தன்

கிளிநொச்சியில் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைந்த, இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சித் தலைவரின் செயலகம் முன்பாக போராட்டம் நடத்திய ஏழு சிறுகட்சிகளின் தலைவர்களை, இரா. சம்பந்தன் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.