காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஜெனிவா அமர்வில் சிறிலங்கா விவகாரம்
ஜெனிவாவில் நடைபெறவுள்ள, பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் 109ஆவது அமர்வில் அமர்வில், சிறிலங்கா தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.
ஜெனிவாவில் நடைபெறவுள்ள, பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் 109ஆவது அமர்வில் அமர்வில், சிறிலங்கா தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தில் சேவையில் உள்ள நான்கு மேஜர் ஜெனரல்களும், ஓய்வுபெற்ற இராணுவத் தளபதியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவைச் சந்தித்துள்ளதாக, ராவய சிங்கள வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா கடற்படை உள்நாட்டில் தயாரித்த, ஒன்பது கரையோர ரோந்துப் படகுகளை நைஜீரியாவுக்கு விற்பனை செய்துள்ளது. வெலிசறையில் உள்ள படகு கட்டுமான தளத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில், நைஜீரியத் தூதுவர், அகமட்டிடம், சிறிலங்கா கடற்படை அதிகாரிகளால் இந்தப் படகுகள் கையளிக்கப்பட்டன.
சிறிலங்கா மீதான நீண்டகால இராணுவத் தளபாட வர்த்தகத் தடையை அமெரிக்கா தளர்த்தியுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், பாதுகாப்பு வர்த்தக கட்டுப்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.
தமிழகத் தேர்தல் களத்தில் இன்றைக்கு உரத்து ஒலிக்கும் முக்கியமான கோரிக்கை, கூட்டணி ஆட்சி. ஆளுங்கட்சியான அதிமுக அதைப் பற்றிப் பேசுவதே இல்லை. திமுகவோ அதற்கான வாய்ப்பை அடியோடு நிராகரிக்கிறது. தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா தரப்போ கூட்டணி ஆட்சிதான் தமிழகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான ஆகச் சிறந்த நிவாரணி என்கிறது.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, யோசித ராஜபக்ச உகண்டா செல்வதற்கு, கடுவெல நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
மேஜர் ஜெனரல் சுமித் மானவடு மரணமான செய்தியைக் கேள்வியுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உடனடியாக, அவரது வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்துள்ளார்.
கொகோஸ் தீவில் இருந்து அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் திருப்பி அனுப்பப்பட்ட 12 அகதிகள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் சுமித் மானவடு (55 வயது) இன்று காலை கொழும்பு தேசிய மருத்துவமனையில் மரணமானார்.
சிறிலங்கா இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவுக்கு, அவரது தாய்ப் படைப்பிரிவான இலகு காலாட்படைப் பிரிவினால் பிரியாவிடை அளிக்கப்பட்டது.