மேலும்

நாள்: 3rd May 2016

கோத்தா மீதான குண்டுத் தாக்குதல் அரசின் உள்வீட்டு வேலை – சரத் பொன்சேகா பரபரப்பு தகவல்

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை இலக்கு வைத்து, கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் ஒரு உள்வீட்டு வேலை என்றும், ராஜபக்ச குடும்பம் அனுதாப உணர்வை வெற்றி கொள்வதற்காகவே, திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றும், சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

போர்க்களமான சிறிலங்கா நாடாளுமன்றம் – எதிரணியினரின் தாக்குதலில் ஐதேக உறுப்பினர் காயம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலையின் போது, எதிரணி உறுப்பினர்களால் தாக்கப்பட்ட, ஐதேக உறுப்பினர் சண்டித் சமரசிங்க காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவல் உரிமைச் சட்டமூலத்தில் திருத்தங்களைக் கோருகிறது உச்சநீதிமன்றம்

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவல் உரிமைச் சட்டமூலத்தின் சில பிரிவுகள், அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதால், அவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் கல்வியில் முன்னிலை வகிக்கும் தமிழ் மாணவர்கள்

பிரித்தானியாவில் வாழும் தமிழ்மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்ட சிறுவர்கள், ஆங்கில மொழியைத் தமது சொந்த மொழியாகக் கொண்ட சிறுவர்களை விட சிறப்பாகச் செயற்படுகிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.

சிறிலங்காவில் இருந்து கொகோஸ் தீவு சென்றது அகதிகள் படகு – அவுஸ்ரேலியா அதிர்ச்சி

சிறிலங்காவில் இருந்து சென்ற அகதிகள் படகு ஒன்று அவுஸ்ரேலியாவின் கொகோஸ் தீவை நேற்றுக்காலை அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவை எதிர்த்து 45 பேர் போட்டி – சூடுபிடிக்கிறது தமிழ்நாடு தேர்தல் களம்

எதிர்வரும், 16ஆம் நாள் நடக்கவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும், 3,794 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக, தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், அதிகபட்சமாக, முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டும், 45 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

எரிக் சொல்ஹெமுக்கு ஐ.நா உதவிச்செயலர் பதவி

சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம், ஐ.நாவின் உதவிச் செயலராக நியமிக்கப்படவுள்ளார்.

கும்பமேளாவில் பங்கேற்க வரும் 14ஆம் நாள் இந்தியா செல்கிறார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜெயினில் நடக்கும் பிரபலமான, கும்பமேளா நிகழ்வில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் இந்தியா செல்லவுள்ளார்.

சிறிலங்கா காவல்துறை ஊடகப் பிரிவு முடக்கப்பட்டது ஏன்?

சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிபொருட்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருப்பதாக, தகவல் வெளியிட்டதாலேயே, சிறிலங்கா காவல்துறையின் ஊடகப் பிரிவு நேற்று முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திர வர்த்தக உடன்பாடு குறித்து சீனா- சிறிலங்கா அடுத்தமாதம் உயர்மட்டப் பேச்சு

சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திடுவது தொடர்பாக, சிறிலங்காவும், சீனாவும் அடுத்தமாதம் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக, சிறிலங்காவின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.