மேலும்

நாள்: 27th May 2016

பொறுப்புக்கூறல் பொறிமுறை குறித்து சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுடன் ரணில் ஆலோசனை

போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான பொறிமுறையை அமைப்பது தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று, பாதுகாப்புச்செயலர் மற்றும் சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

எல்லோருடைய நன்மைக்காகவும் தான் கிழக்கு முதல்வருக்குத் தடை – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் பங்கேற்கும் நிகழ்வுகளில், முப்படையினரும் பங்கேற்பதை தவிர்க்குமாறு, முடிவு எடுக்கப்பட்டது, எல்லோருடைய நன்மைக்காகவுமே என்று தெரிவித்துள்ளார், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி.

சிறிலங்காவுக்கு 1.5 மில்லியன் டொலர் வழங்குகிறது சீனா – தாமதமாக வரும் உதவி

சிறிலங்காவில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக, 1.5 மில்லியன் டொலரை சீனா வழங்கவுள்ளதாக அந்த நாட்டின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எக்னெலிகொட வழக்கில் தடுப்பில் இருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரிக்கு பிணை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரியான லெப்.கேணல், பிரபோத சிறிவர்த்தன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஜி-7 நாடுகளின் தலைவர்களிடம் கோரிக்கை

சிறிலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு, ஜி-7 நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜி-7 நாடுகளின் தலைவர்களை இன்று சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறும் ஜி-7 நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் இன்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

சம்பூர் விவகாரம் – கருத்துக்களை வெளியிட இருதரப்புக்கும் தடைவிதித்தார் ரணில்

சம்பூரில் நடந்த சர்ச்கைக்குரிய நிகழ்வு தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவெடுக்கும் வரை, அதுபற்றி எந்தக் கருத்துக்களையும் வெளியிடக் கூடாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இரண்டு தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளார்.

வியட்னாம் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

விவசாயம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில், நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், வியட்னாம் பிரதமர் குயுன் சான் புக்கிற்கும் இடையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

கிழக்கு முதல்வர் மீது விசாரணை நடத்தக் கோருகிறார் மகிந்த

சிறிலங்கா கடற்படை அதிகாரியான கப்டன் பிரேமரத்னவை மோசமாகத் திட்டிய, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் முகமட்டை விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

சீனா – சிறிலங்கா இடையே பொருளாதார தொழில்நுட்ப உடன்பாடு கையெழுத்து

சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை கையெழுத்திடப்பட்ட இந்த உடன்பாட்டின் கீழ், 13,800 மில்லியன் ரூபாவை சிறிலங்காவுக்கு சீனா கொடையாக வழங்கும்.