மேலும்

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு

Major General Prasanna de Silvaஇறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான சிறிலங்கா இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா இன்று இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.

இன்று 55ஆவது வயதை எட்டியுள்ள அவர், இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்றுள்ளார்.

1984ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தில் இணைந்த இவர், 33 ஆண்டுகள் அதில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

இறுதிக்கட்டப் போரில், மேஜர் ஜெனரல் பி்ரசன்ன டி சில்வா, முகமாலைப் பகுதியில் இருந்து புதுமாத்தளன் வழியாக முன்னேறிய 55ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர்.

போரின் இறுதி நாட்களில் இவர் 59 ஆவது டிவிசனின் பதில் கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டிருந்தார்.

போர் முடிந்த பின்னர், பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றியிருந்தார்.

அண்மைய ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா கூட்டுப்படைகளின் தலைமையக இணைப்பதிகாரியாகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *