கொழும்புத் துறைமுகத்தில் ஜப்பானிய போர்க்கப்பல்கள்
ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன. ஜேஎஸ் மகினாமி, ஜே.எஸ்சுசனாமி ஆகிய போர்க்கப்பல்களே கொழும்பு வந்துள்ளன.
ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன. ஜேஎஸ் மகினாமி, ஜே.எஸ்சுசனாமி ஆகிய போர்க்கப்பல்களே கொழும்பு வந்துள்ளன.
சம்பூர் அனல் மின் திட்ட விவகாரத்தில், அந்தப் பகுதி மக்களின் நலன் கருதி இந்தியா சிந்தித்து செயற்படும் என தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
1989 முதல் 2011 வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் போன்றில்லாமல் தற்போதைய தேர்தல் களம் மாறு பட்டிருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி ஆட்சியைப் பிடிப்பதில், இந்த முறை நமக்கான வாய்ப்பு என்று கணக்கிட்டிருந்த திமுகவிற்கு தற்போதைய தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி கடும் சேதத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
சீன நிறுவனங்களின் முதலீட்டில், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம் என்பன கைத்தொழில் வலயமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வரும் வெள்ளிக்கிழமை, யாழ்ப்பாணத்துக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, வடக்கு மாகாணசபை அமைச்சரவையை மாற்றியமைப்பது தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 15ஆம் நாள்- வெள்ளிக்கிழமையை அரசாங்க விடுமுறை நாளாக சிறிலங்கா அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை சிறிலங்காவின் உள்நாட்டு விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தன வெளியிட்டுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உருப்படியாக எதையும் செய்யாத வடக்கு மாகாணசபை, மத்திய அரசாங்கம் மேற்கொள்ளும் மீள்குடியேற்ற, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முட்டுக் கட்டையாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார், சிறிலங்காவின் புனர்வாழ்வு, மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்.
சிறிலங்கா பிரதர் ரணில் விக்கிரமசிங்கவின் சீனப் பயணத்தை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வரவேற்றிருக்கிறார்.
சிறிலங்காவில், அமெரிக்க டொலருக்கு நிகரான மதிப்பு சீனாவின் யுவான் நாணயத்துக்குக் கிடைக்கவுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீனப் பயணத்தின் போது இதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தாமதிக்கப்பட்டதற்காக, எந்த இழப்பீட்டையும் சீனாவுக்குச் செலுத்த வேண்டியதில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.