மேலும்

அம்பாந்தோட்டையில் 1000 ஏக்கர் நிலம் சீனாவுக்கு வழங்கப்படுகிறது

ranilசீன நிறுவனங்களின் முதலீட்டில், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம் என்பன கைத்தொழில் வலயமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று  செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தல விமான நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு,  சீன நிறுவனங்களுக்கு ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

அம்பாந்தோட்டையில் உட்கட்டமைப்பு  வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்ட போதிலும், அங்கு பொருளாதார அபிவிருத்தி ஏற்படவில்லை.

ஏனென்றால் சிறிலங்கா அரசாங்கத்தினாலோ, சிறிலங்கா நிறுவனங்களினாலோ அதனை அபிவிருத்தி செய்ய முடியாது.அதனை தரமுயர்த்தும் பணி சீன நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

ஏற்கனவே செய்யப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டு, அம்பாந்தோட்டை துறைமுக நகரப்பகுதி கைத்தொழில் வலயமாக அபிவிருத்தி செய்யப்படும்.

கைத்தொழில் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு உள்ளிட்டவற்றை ஈர்ப்பதற்குத் தேவைப்பட்டால், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாவது கட்ட அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும். மத்தல விமான நிலையமும் அபிவிருத்தி செய்யப்படும்.

சிறிலங்கா நிறவனங்களால் இதனைச் செய்ய முடியாது. துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை நாம் சீன நிறுவனங்களிடம் கொடுக்க வேண்டியுள்ளது.

இப்போது அவர்கள், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையத்துக்கு கப்பல்களையும், விமானங்களையும், விமான நிறுவனங்களையும் கொண்டு வரத் தொடங்கியுள்ளனர்.

அம்பாந்தோட்டையில் புதிய கைத்தொழில் வலயத்தை அமைக்க, சீன வர்த்தகர்களுக்கு 100 ஏக்கர் நிலம் 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *