மேலும்

சம்பூரில் சிறிலங்கா கடற்படை வசமிருந்த 177 ஏக்கர் காணிகள் விடுவிப்பு (சிறப்புப் படங்கள்)

sampoor-land-release (2)திருகோணமலை- சம்பூரில் சிறிலங்கா கடற்படையினர் வசமிருந்த 177 ஏக்கர் காணிகள் இன்று உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 

சம்பூர் மகாவித்தியாலயத்தை உள்ளடக்கியதாக, 117 ஏக்கர் நிலப்பகுதியே இன்று சிறிலங்கா கடற்படையினரிடம் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த நிலப்பகுதியில், விதுர என்ற பாரிய கடற்படைத்தளம் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று சம்பூரில் நடந்த காணிகள் விடுவிப்பு நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண ஆளுனர், முதல்வர், அமைச்சர்கள், மற்றும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், கடற்படைத்தளபதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

sampoor-land-release (1)sampoor-land-release (2)sampoor-land-release (3)sampoor-land-release (4)sampoor-land-release (5)sampoor-land-release (6)sampoor-land-release (7)sampoor-land-release (8)sampoor-land-release (9)sampoor-land-release (10)sampoor-land-release (11)sampoor-land-release (12)

இவர்கள் காணிகளின் உரிமையாளர்களிடம் அவர்களின் காணிகளை ஒப்படைப்பதற்கான உறுதிப்பத்திரங்களைக் கையளித்தனர். அத்துடன் சம்பூர் மகாவித்தியாலயமும், நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக, நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த பெரும் சிரமங்களை அனுபவித்த சம்பூர் மக்கள் மகிழ்ச்சியுடன் தமது சொந்த இடங்களைப் பார்வையிட்டதைக் காண முடிந்தது.

சிறப்புப் படங்கள் – நன்றியுடன் எஸ்.எஸ்.குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *