மேலும்

சுன்னாகம் குடிநீர் பிரச்சினைக்கு இரணைமடு திட்டம் தான் ஒரே தீர்வு- அமைச்சர் ஹக்கீம்

hakeemஇரணைமடுக் குளத்தின் அணைக்கட்டை இரண்டு அடி அதிகரித்து. அங்கிருந்து குடிநீரை விநியோகிப்பது தான், சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினைக்கு நடைமுறைச்சாத்தியமான ஒரே தீர்வு என்று சிறிலங்காவின் நகர திட்டமிடல், நீர்விநியோக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதுபற்றிக் கூறுகையில்-

சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினைக்கு வழிகாணும் வகையில், இரணைமடுக் குளத்தில் இருந்து குடிநீரை வழங்கும் திட்டத்துக்கு, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன், 17 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்ட போதும், விவசாயிகளின் எதிர்ப்புக் காரணமாக, இந்த திட்டம் ஒரு ஆண்டாக இழுபறிக்குள்ளாகியிருக்கிறது.

சுன்னாகத்துக்கு குடிநீர் வழங்குவதால், விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாது என்பது குறித்து விளக்கமளிக்க இரணைமடுவைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கான கூட்டம் ஒன்று விரைவில் நடத்தப்படவுள்ளது.

சுன்னாகம் பகுதியில் உள்ள கிணறுகளில் இருந்து பெறப்படும் நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் சபை இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீரை வழங்கி வருகிறது. தினமும், நீர்த்தாங்கிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதால் இழப்பு ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கருத்து “சுன்னாகம் குடிநீர் பிரச்சினைக்கு இரணைமடு திட்டம் தான் ஒரே தீர்வு- அமைச்சர் ஹக்கீம்”

  1. ரவி/சுவிஸ் says:

    அப்படியே அமைச்சர் ஹக்கீம் வடக்கு தீவுப்பகுதியில் மக்களின் நீர் தேவைகளை பூர்த்தி பண்ண ஆவன பண்ணவேண்டும், இலங்கையில் ஒன்பது தீவுகள் உண்டு, இதில் மக்கள் வாழும் தீவுகளாக புங்குடுதீவு நெடுந்தீவு நைனாதீவு அனலைதீவு மண்டைதீவு பாலைதீவு கைட்ஸ் போன்ற தீவுகள் இருக்கின்றன, இதில் அண்மையில் நெடுந்தீவில் நுறு மில்லியன் ரூபாய் செலவில் கடல் நீரை நன்னீராக மாற்றும் புதிய மிசின்கள் போடப்பட்டு ஒவ்வொரு நாளும் பல லட்சம் லிட்டர் நன்நீர்கள் கடலில் இருந்து பெறப்படுகின்றன, இதற்கு இலங்கை அரசு வடக்கு மாகாணம் போன்றவை உதவி செய்தன, அதனைப் போன்ற திட்டத்தை அமைச்சர் ஹக்கீம் தீவுப்பகுதியிலும் தொடரவேண்டும், வடக்கு மாகாணத்திலே அதிக வெயில் உள்ள வரண்ட பிரதேசமாக தீவுப்பகுதியே உள்ளன, அதனால் அமைச்சர் தீவுப் பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், நன்றி,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *