மேலும்

ஞானசார தேரருக்கு பெப். 9ஆம் நாள் வரை விளக்கமறியல் – ஹோமகம நீதிமன்றத்தில் பதற்றம்

gnanasara-court

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு உள்ளதாகியுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரரை அடுத்த மாதம் 9ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க ஹோமகம நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ஹோமகம நீதிமன்றத்தினால் கைது செய்யுமாறு நேற்று உத்தரவிடப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரர் இன்று காலை ஹோமகம காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அவரை, ஹோமகம நீதிமன்றத்தில் காவல்துறையினர் முன்னிலைப்படுத்தினர்.

இதன்போதே, ஞானசார தேரரை அடுத்த மாதம் 9ஆம் நாள் விரை விளக்கமறியலில் வைக்க ஹோமகம நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

gnanasara-court (1)gnanasara-court (2)gnanasara-court (3)

gnanasara-court (4)

நீதிவானின் இந்த உத்தரவையடுத்து., நீதிமன்றத்துக்கு வெளியே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

பொதுபல சேனாவைச் சேர்ந்த பிக்குகளும் ஆதரவாளர்களும், நீதிமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்ததுடன், நீதிமன்றத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். எனினும் காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஹோமகம நீதிமன்றத்தில் பதற்றநிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மேலும் ஒரு தொகுதி பிக்குகள் அங்கு வந்து, தம்மையும் கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அத்துடன் காவல்துறையின் பாதுகாப்பை உடைத்துக் கொண்டு நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயும் நுழைய முயன்றனர்.

homagama-bbs (1)homagama-bbs (2)

homagama-bbs (3)

இதன் போது ஒரு பிக்கு சுவரில் இருந்து நீதிமன்றத்துக்குள் குதித்த போது காயமடைந்தார். அவர் ஏனைய பிக்குகளால் தூக்கிச் செல்லப்பட்டார்.

பிக்குகள் நீதிமன்றத்துக்கு வெளியே கூக்குரலிட்டு ஆர்ப்பாட்டம் செய்வதால், நீதிமன்ற கதவுகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

அதேவேளை, ஞானசார தேரரை சிறைச்சாலைக்கு கொண்டு செல்வதற்கு சிறைச்சாலை வாகனம் வந்த போது, அதன் சக்கரத்தின் கீழ் பிக்கு ஒருவர் படுத்திருந்து போராட்டம் நடத்தினார்.

இந்த நிலையில், சுமார் 300 வரையான கலகம் அடக்கும் காவல்துறையினரும் நீர்ப்பீரங்கி வாகனமும் வரவழைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *