மேலும்

மகிந்த ஆட்சியமைத்தால் இந்தியாவுடனான உறவு மைல்கல்லாக அமையும் – தயான் ஜெயதிலக

Dayan-Jayatillekaவரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், சிறிலங்கா அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையில் முக்கியமானதொரு மைல் கல்லாக இந்தியாவுடனான உறவுகள் அமைந்திருக்கும் என்று கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  வெளிவிவகாரக் கொள்கை ஆலோசகராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள கலாநிதி தயான் ஜெயத்திலக, வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பு ஒன்றிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“ஜனவரி 8ஆம் நாள் நடந்த அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வியுற்ற மகிந்த ராஜபக்ச, தனது படிப்பினைகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கிறார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  வெளிவிவகாரக் கொள்கை மையத்தில் இருந்து விரியும் தொடர் வட்டங்களாக இருக்கும்.

மையத்துக்கு நெருக்கமாக உள்ள வட்டம், உடனடி அயல்நாட்டைப் பற்றியது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் அறிக்கையில், இந்தியா பற்றி சிறப்பாக குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான நல்லுறவு கேள்விக்கிடமற்றது.  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  வெளிவிவகாரக் கொள்கையின் மைல் கல்லாக இந்தியாவுடனான நல்லுறவுகள் அமைந்திருக்கும்.

அதையடுத்த வட்டம், தெற்காசியா, அதையடுத்து ஆசியா, அதற்கடுத்து, ஈரோ ஆசியா, அதையடுத்து, பூகோளத்தின் தென்பகுதி, கடைசியாக உலகம் என்று தொடர்வட்டங்கள் அமைந்திருக்கும்.

அதேவேளை, பொருளாதாரத் தேவைகளுக்காக சீனா, இந்தியா, மற்றும் ஏனைய நாடுகளுடன் சிறிலங்கா உறவுகளை வளர்த்துக் கொள்ளும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *