மேலும்

சுதந்திரக் கட்சியில் இருந்து சந்திரிகாவையும் வெளியேற்ற வேண்டும் என்கிறார் சுசில்

Chandrika-Kumaratungaசிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்குவது குறித்து, கட்சியின் அடுத்த மத்திய குழுக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.

ஐதேகவுடன் இணைந்து கொண்டதற்காக,  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உஎறுப்பினர்கள் சிலர் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவளிக்கும் சந்திரிகா குமாரதுங்க மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நடத்தப்படும் முதலாவது மத்திய குழுழுக் கூட்டத்தில் சந்திரிகா குமாரதுங்கவின் உறுப்புரிமை குறித்து விவாதிக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரான சந்திரிகா குமாரதுங்க தற்போது அந்தக் கட்சியின் போசகராக பதவி வகிக்கிறார்.

இவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவினதும், அவருக்குப் பின்னர் கட்சியின் தலைவராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவினதும் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *