மேலும்

மாதம்: December 2014

தமிழர்களை வெளியேற்றி விட்டு திருப்பதியில் தரிசனம் செய்த மகிந்த

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக போராட்டம் நடத்த திருப்பதி செல்ல முயன்ற தமிழ் அமைப்புகளை ஆந்திர காவல்துறையினர் தமிழ்நாடு எல்லையில் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மோடியின் பாணியில் மைத்திரி – கண்டி கூட்டத்தில் பரபரப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அதிகாரபூர்வமாக நேற்று கண்டியில் தனது தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துள்ளார்.

போர்க்குற்றம் சுமத்தப்பட்ட ஜெனரல் அவசரமாக கொழும்பு திரும்பினார்

தென்னாபிரிக்காவில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போதிலும், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சிறிலால் வீரசூரிய கைது செய்யப்படுவதில் இருந்து தப்பி, கொழும்பு திரும்பியுள்ளார்.

திருப்பதி சென்றடைந்தார் மகிந்த – கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட பயணத்திட்டம்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மாலை திருப்பதியைச் சென்றடைந்துள்ளார்.அங்கு அவருக்கு திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாளை முக்கிய முடிவை அறிவிக்கிறார் அமைச்சர் வாசு – மைத்திரியை ஆதரிப்பார்?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்று, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, நாளை முக்கிய தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருப்பதி புறப்பட்டார் மகிந்த – கோவையில் கொடும்பாவி எரித்து போராட்டம்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக இன்று மாலை இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக, அவரது ஊடகப் பேச்சாளர் மொகான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் குழப்பத்தை ஏற்படுத்த அனைத்துலக சக்திகள் முயற்சி – இராணுவத் தளபதி குற்றச்சாட்டு

சிறிலங்காவில் குழப்பநிலையை ஏற்படுத்த பல்வேறு அனைத்துலக சக்திகளும் முயற்சிப்பதாக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் ராவய ஆசிரியர்

மகிந்த ராஜபக்சவை விடவும் மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று செய்தி வெளியிட்ட ராவய சிங்கள வாரஇதழின் ஆசிரியர் கே.டபிள்யூ.ஜனரஞ்சன, சிறிலங்கா காவல்துறை குற்றப்புலனாய்வுத் துறையினரால் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிட்டே மகிந்தவுடன் கைகுலுக்கவில்லை – காரணத்தை விபரிக்கிறார் மைத்திரி

சிறிலங்கா அதிபருடன் கைகுலுக்கி தனது கைகளில் கறையை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாததால் தான், நேற்று அவர் கைகுலுக்க முயன்றபோது அதனைத் தவிர்த்துக் கொண்டதாக கூறியுள்ளார் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன.

மகிந்த, மைத்திரி குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்கள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிழ்ச்சி கொள்ளவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.