மேலும்

மோடியின் பாணியில் மைத்திரி – கண்டி கூட்டத்தில் பரபரப்பு

maithri-kandyசிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அதிகாரபூர்வமாக நேற்று கண்டியில் தனது தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், நேற்றுக்காலை கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்ட மைத்திரிபால சிறிசேன, அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

அதையடுத்து, கண்டி விநாயகர் ஆலயத்திலும், கிறிஸ்தவ தேவாலயத்திலும், வழிபாடுகளை மேற்கொண்டார்.

நேற்றுமாலை கண்டியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பாரிய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் எதிரணியின் தலைவர்களுடன் இணைந்து மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்தார்.

maithri-kandy-meeting (1)

maithri-kandy-meeting (2)

maithri-kandy-meeting (3)

பெருந்திரளான மக்கள் பங்கேற்றிருந்த இந்தக் கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாணியில் உடையணிந்து வந்திருந்தார்.

தேசிய உடைக்கு மேலாக அவர் ஒரு நீண்ட மேலங்கியை அணிந்திருந்தார்.

எனினும், மைத்திரிபால சிறிசேன அணிந்திருந்த குண்டுதுளைக்காத பாதுகாப்பு அங்கியை மறைக்கவே அவர் அந்த மேலங்கியை அணிந்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.

நேற்றைய பேரணியில், முன்னார் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா, அத்துரலிய ரத்தன தேரர், மனோ கணேசன், சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, கரு ஜெயசூரிய, சஜித் பிறேமதாச மற்றும்,  ஹிருனிகா பிறேமச்சந்திர உள்ளிட்ட எதிரணியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *