மேலும்

நாள்: 22nd December 2014

தோல்வியுற்றால் அமைதியாக ஆட்சியை ஒப்படைப்பேன் – உறுதி கூறுகிறார் மகிந்த

அதிபர் தேர்தலில் தாம் தோல்வியுற்றால் அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைத்து விடுவேன் என்று மீண்டும் உறுதியளித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பறிபோனது

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் விலகியதை அடுத்து. சிறிலங்கா நாடாளுமன்றத்தில், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது.

மைத்திரியுடன் இணைந்தது ரிசாத் பதியுதீன் கட்சி

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த, அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக  கொட்டி வரும் பெருமழையால், பெரும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில், ஆறுகள் பெருக்கெடுத்தும், குளங்கள் நிரம்பியும், பல பகுதிகள் வெள்ளக் காடாக மாறியுள்ளன.

மகிந்தவைப் போல, மைத்திரி கையிலும் ‘வஜ்ரா’

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அண்மைக்காலமாக, சக்தியை அளிக்கும் என்று கூறப்படும், ‘வஜ்ரா’ என்ற தங்க நிறமுள்ள மாந்திரீகப் பொருள் ஒன்றை தனது கைக்குள் வைத்திருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்தரிக்கும் ஐந்தரை இலட்சம் அஞ்சல் வாக்காளர்கள்

சிறிலங்காவின் அதிபர் தேர்தல் வரலாற்றில், பிரதான வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதிகளை அறிந்து கொள்ளாமலேயே, வாக்களிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு உள்ளாகியுள்ளனர் சுமார் ஐந்தரை இலட்சம் வாக்காளர்கள்.

முஸ்லிம் காங்கிரசுக்குள் குழப்பம் – ஒப்புக்கொண்டார் ஹக்கீம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக தமது கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்பதை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒப்புக்கொண்டுள்ளார்.

மகிந்த வெற்றிபெற்றால் பொருளாதாரத் தடை விதிக்கும் ஐ.நா – மிரட்டுகிறது எதிரணி

சிறிலங்காவுக்கு ஜெனிவாவில் எழுந்துள்ள நெருக்கடியை, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்தவை பதவியில் இருந்து அகற்றும் மேற்குலக சூழ்ச்சிக்கு மைத்திரியும் உடந்தை

தற்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்றும் அனைத்துலக சூழ்ச்சியில் மைத்திரிபால சிறிசேன தரப்பும் தொடர்புபட்டுள்ளதாக, சிறிலங்காவின் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குற்றம்சாட்டியுள்ளார்.