மேலும்

நாள்: 25th December 2014

ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணியும் மைத்திரிக்கு ஆதரவு

சிறிலங்கா அதிபர் தேர்தலில், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா அணி) அறிவித்துள்ளது.

பொ. கனகசபாபதி: ஈழத்தமிழ் நல்லாசியர் கனடாவில் காலமானார்

ஈழத்தமிழ்ச் சமூகத்தினர் பலராலும் ‘கனெக்ஸ்’ எனப்  அறியப்பட்ட ‘அதிபர்’ பொன்னையா கனகசபாபதி அவர்கள் தனது எழுபத்தொன்பதாவது அகவையில் நேற்று  கனடாவில் காலமானார். [இரண்டாம் இணைப்பு செய்தித்திருத்தம்]

மட்டக்களப்பில் மைத்திரியின் தேர்தல் செயலகம் மீது பெற்றோல் குண்டுவீச்சு

மட்டக்களப்பு – சந்திவெளியில், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் செயலகம் மீது நேற்று நள்ளிரவு பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதொகாவும் உடைகிறது – மைத்திரி பக்கம் பாய்ந்தார் உபதலைவர்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மைத்திரியின் பாதுகாப்புக்கு 45 அதிரடிப்படையினர் – தேர்தல் ஆணையாளர் உத்தரவு

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறும், அவருக்கு 45 சிறப்பு அதிரடிப்படையினரைப் பாதுகாப்புக்கு நியமிக்குமாறும், சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில் தேர்தல் களநிலவரங்களை ஆய்வு செய்யும் அமெரிக்கா

வரும் ஜனவரி 8ம் நாள் சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வடக்கிலும், கிழக்கிலும் உள்ள களநிலவரங்களை அறிந்து கொள்ளும் முயற்சியில், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஈடுபட்டுள்ளது.