மேலும்

நாள்: 20th December 2014

சிறிலங்காவுக்கு இரு போர்க்கப்பல்களை விற்கிறது இந்தியா

சிறிலங்காவுக்கு இரண்டு போர்க்கப்பல்களை இந்தியா ஏற்றுமதி செய்யவுள்ளதாக, இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் தெரிவித்துள்ளார்.

ஹப்புத்தளையில் ஐதேக கூட்டம் மீது ஆளும்கட்சி குண்டர்கள் தாக்குதல் – 5 பேர் காயம்.

பதுளை மாவட்டத்தில் உள்ள ஹப்புத்தளையில், இன்று மாலை எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக ஐதேக நடத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் மீது ஆளும்கட்சியினர் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் குழுடன் ஐதேக இரகசிய ஆலோசனை

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் குழுவொன்றுடன் எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில், ஐதேகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோன் அமரதுங்க இன்று காலை பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் ஒருநிறம்; தெற்கில் ஒரு நிறம் – மகிந்தவின் வண்ணஜாலம்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது தேர்தல் பரப்புரைகளில் வடக்கு, கிழக்கில் ஒரு உத்தியையும், நாட்டின் பிறபகுதிகளில் இன்னொரு விதமான உத்தியையும் பயன்படுத்தி வருகிறார்.

சீனாவின் திட்டத்துக்கு சிறிலங்காவில் வலுக்கிறது எதிர்ப்பு

சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்கு சிறிலங்காவில் அரசியல் மட்டத்தில் மட்டுமன்றி, சுற்றுச்சூழல் அமைப்புகளிடம் இருந்தும் எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துள்ளது.

மகிந்தவின் பரப்புரைக் கூட்டங்களில் ரிசாத் பதியுதீன் இல்லை

வன்னியிலும், மட்டக்களப்பிலும் நடைபெற்ற சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் பரப்புரைக் கூட்டங்களில், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பங்கேற்காமல் ஒதுங்கியுள்ளது.

சிங்கப்பூரின் உத்தி சிறிலங்காவுக்கு தேவையில்லை – மகிந்தவின் அடுத்த குத்துக்கரணம்

சிறிலங்காவைச் சிங்கப்பூர் ஆக்குவேன் என்று முன்னைய ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இப்போது சிங்கப்பூரின் முகாமைத்துவ உத்தி சிறிலங்காவுக்குத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.