மேலும்

நாள்: 3rd December 2014

சீனாவின் தலையீடுகள் அதிவேகமாக அதிகரிப்பு – இந்திய கடற்படைத் தளபதி கவலை

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் நடவடிக்கைகள் அதிவேகமாக அதிகரித்து வருவதாக இந்தியப் கடற்படைத் தளபதி அட்மிரல் ரொபின் டோவன் கவலை வெளியிட்டுள்ளார்.

மைத்திரி களமிறங்கியது மேற்குலக சூழ்ச்சி – மகிந்த சமரசிங்க

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மேற்குலக சக்திகள் சதி செய்வதாக சிறிலங்கா அரசாங்கம்  மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.

இந்தியப் புலனாய்வுப் பிரிவு சிறிலங்கா வருவதில் இழுபறி

தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க, இஸ்ரேலியத் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு,  திட்டமிட்டது குறித்து சிறிலங்காவில் விசாரணை நடத்த இந்தியாவின் தேசிய புலனாய்வுப் பிரிவு அனுமதி கோரியுள்ளது.

யாழ்.சிறையில் தமிழ்நாட்டு மீனவர்கள் உண்ணாவிரதம் – இந்தியத் தூதரகத்தின் கோரிக்கை நிராகரிப்பு

யாழ்ப்பாணச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் 38 பேர் இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் 10 வேட்பாளர்கள் போட்டி

அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 10 வேட்பாளர்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

”அதிபர் மாளிகையில் காலடி வைக்கமாட்டேன்” – மைத்திரி சூளுரை

அடுத்தமாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், அதிபர் மாளிகையில் காலடி எடுத்து வைக்கமாட்டேன் என்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

மகிந்த மீண்டும் போட்டியிடுவதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்யக் கோரி, சிறிலங்கா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெறுங்கையுடன் திரும்பும் சீன மீன்பிடிக் கப்பல்களின் மர்மம் – சிறிலங்கா அரசு சந்தேகம்

சிறிலங்கா கொடியுடன் இந்தியப் பெருங்கடலில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட சீன மீன்பிடிக் கப்பல்கள் வேறேதும் பணிகளில் ஈடுபட்டுள்ளனவா என்று சந்தேகம் எழுந்துள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஒட்டுசுட்டான் காட்டில் புதைகுழி தோண்டும் பணி ஆரம்பம் – சாம்பல் மட்டுமே கிடைத்தது

முல்லைத்தீவில், விடுதலைப் புலிகளால், தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஜெயரட்ணம், இராணுவ அதிகாரி கப்டன் லக்கி உள்ளிட்ட 80 பேர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தை அகழும் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.