மேலும்

நாள்: 15th December 2014

சிட்னி பணய நாடகம் முடிந்தது – அகதிகள் மீதான கெடுபிடிகள் இறுகும் வாய்ப்பு

சிட்னியில், உணவகம் ஒன்றில் ஆயுததாரியால் 16 மணிநேரமாக பயணம் வைக்கப்பட்டிருந்தவர்கள், காவல்துறையின் அதிரடித் தாக்குதலில் மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவத்தையடுத்து அவுஸ்ரேலியாவில் அகதிகள் தொடர்பான கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் சாத்தியங்கள் உருவாகியுள்ளன.

மகிந்தவின் இரகசியங்களை போட்டுடைக்கிறார் சம்பிக்க

2005ம் ஆண்டு அதிபர் தேர்தலில் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்று, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணசபை, கோட்டே மாநகரசபைகளில் ஆட்சியைக் காப்பாற்ற போராட்டம்

கோட்டே மாநகரசபையில் நான்கு உறுப்பினர்கள் எதிரணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதால், அங்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

மகிந்தவின் ஆட்சியில் எனக்கும் அநீதி இழைக்கப்பட்டது – அண்ணன் சமல் புலம்பல்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் தனக்கும் அநீதி இழைக்கப்பட்டதாக, பொதுக்கூட்டம் ஒன்றில் பகிரங்கமாக புலம்பியிருக்கிறார் சிறிலங்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச.

கூச்சல் எழுப்பியதால், கோபத்தில் பாதியில் நின்றது மகிந்தவின் உரை

தம்புள்ளையில் ஆளும்கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உரையாற்றிய போது, அங்கிருந்தவர்கள் கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்ததால், ஆத்திரத்தில் தனது பேச்சை முடித்துக் கொண்டு கீழ் இறங்கிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிட்னியில் பணயம் வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் – சிறிலங்கா அதிபர் கவலை

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள உணவகம் ஒன்றில் துப்பாக்கி ஏந்திய மர்மநபரால் பயணக் கைதியாக பொதுமக்கள் பிடித்து வைக்கப்பட்டுள்ளது குறித்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டியது முக்கியம் – சுமந்திரன்

தமிழ்மக்களின் தேசியப் பிரச்சினைக்கு, வரும் அதிபர் தேர்தல் தீர்வைத் தரப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களைக் குழப்ப சூழ்ச்சி – புலம்புகிறார் சம்பிக்க

அதிபர் தேர்தல் தொடர்பான தமிழ் சமூகத்தின் மனோநிலையை மாற்றும் முயற்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்  ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க.

ஐ.நா விசாரணை நீதியை வழங்காது – என்கிறார் பீரிஸ்

சிறிலங்கா தொடர்பாக மேற்கொள்ளப்படும்  ஐ.நா தலைமையிலான அனைத்துலக விசாரணை நீதியானதாக அமையாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிரணி மீது கோத்தா ஆவேச பாய்ச்சல்

தீவிரவாதிகள் அரசியலில் ஈடுபடும் போது, அரச படையினர் அரசியலில் ஈடுபட்டால் என்ன என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியிருக்கிறார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.