மேலும்

நாள்: 14th December 2014

புரளி கிளப்பிய அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க – முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியிட்ட சிறிலங்கா அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவுக்கு, முஸ்லிம் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

யாருக்கு ஆதரவு, சம்பந்தனின் இந்தியப் பயண இரகசியம் – முடிச்சை அவிழ்க்கிறார் மாவை

அடுத்த மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

‘சிறிலங்காவில் சீனாவின் இருப்பு தனக்கு பாதுகாப்பற்றதென இந்தியா கருத வேண்டியதில்லை’ – முன்னாள் இராஜதந்திரி ஜெயந்த தனபால

சீனாவுக்கு சிறிலங்கா சிறப்புச் சலுகைகளை வழங்குவது தொடர்பாகவும் சிறிலங்காவில் சீனாவால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பாகவும் இந்தியா திறந்த மனதோடு கருத்துக்களை வெளியிட வேண்டும் என முன்னாள் இராஜதந்திரி ஜெயந்த தனபால தெரிவித்துள்ளார்.

ரஷ்ய நிபுணர்கள் குழுவும் விசாரணைக்கு வருகிறது

சிறிலங்கா விமானப்படையின் அன்ரனோவ் விமானம் அத்துருகிரியவில் வீழ்ந்து நொருங்கிய சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு ரஷ்ய நிபுணர்கள் குழுவொன்று இன்று கொழும்பு வரவுள்ளது.

புதுடெல்லியில் உயர்மட்டப் பேச்சுக்களில் சம்பந்தன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவின் பல்வேறு உயர்மட்டப் பிரமுகர்களுடன் இரகசியப் பேச்சுக்களை நடத்தி வருவதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

ஐதேக ஆட்சிக்கு வந்தால் கே.பி மீது சட்ட நடவடிக்கை – ரணில் விக்கிரமசிங்க

ஐதேக ஆட்சிக்கு வந்தால், விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளராக கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அமைச்சர் குத்துக்கரணம் – அமெரிக்க தூதுவர் சலுகைகளை வழங்க முன்வரவில்லையாம்

அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படுவதற்கு, அமெரிக்கத் தூதுவராக இருந்த மிச்சேல் ஜே சிசன் தனக்கு இலஞ்சம் தர முயற்சிக்கவில்லை என்று, குத்துக்கரணம் அடித்துள்ளார், சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன்.

ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களுக்குத் தடைபோட்ட வேட்பாளர்கள்

அடுத்தமாதம் சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களை அழைப்பதற்கு இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நால்வர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா அறிக்கை கிலியில் சிறிலங்கா – இப்போதே சட்டவல்லுனர்களைத் தயார்படுத்துகிறது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள சிறிலங்கா குறித்த அறிக்கையை எதிர்கொள்வது குறித்து உலகிலுள்ள மிகப் பிரபலமான சட்டவல்லுனர்களுடன் சிறிலங்கா தொடர்பு கொண்டுள்ளது.