மேலும்

நாள்: 6th December 2014

ரிசாத் பதியுதீன் கட்சி மகிந்தவுக்கு ஆதரவு

அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, ஆதரவு வழங்க அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான யோசனை என்ன? – வேட்பாளர்களிடம் கேட்கிறது கூட்டமைப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரதானமான பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கப் போகிறார்கள் என்பது பற்றிய யோசனைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இளம் இலங்கைக் குடும்பத்தை நௌரு கொண்டு செல்வதற்கு எதிராக அவுஸ்ரேலியாவில் போராட்டம்

மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பேர்த் தடுப்பு முகாமில் இருந்து, இளம் இலங்கைக் குடும்பம் ஒன்றை நௌருவில் உள்ள தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா அமைச்சரின் குற்றச்சாட்டை அமெரிக்கத் தூதரகம் நிராகரிப்பு

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றிய மிச்சேல் ஜே சிசன் தனக்கு இலஞ்சம் தர முயன்றதாக, சிறிலங்கா அமைச்சர் குணரத்ன வீரக்கோன் சுமத்திய குற்றச்சாட்டை, அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளது.

அமெரிக்கத் தூதுவர் இலஞ்சம் தர முயன்றார் – சிறிலங்கா அமைச்சர் பரபரப்புக் குற்றச்சாட்டு.

சிறிலங்காவில் இருந்து வெளியேறும் அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் தனக்கு இலஞ்சம் தர முயன்றதாக, சிறிலங்கா அமைச்சர் குணரத்ன வீரக்கோன் பரப்புரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளார்.

அமெரிக்காவுக்கு திரும்பினார் சிசன் – ஐ.நா பதவியை ஏற்கிறார்

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய மிச்சேல் ஜே சிசன் நேற்றுடன் தனது பணியை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார்.

டிசம்பர் 20 இற்கு பின்னரே கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளிவரும் – மாவை சேனாதிராசா

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரை நிறுத்தாது என்று கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, இந்த தேர்தல் தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாடு இம்மாதம் மூன்றாவது வாரத்தில் தான் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சி மகிந்தவுக்கு ஆதரவு

சிறிலங்காவின் மூத்த அமைச்சர் டியூ குணசேகர தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையில் இருந்து தப்பிக்க சிறிலங்கா முயற்சி

சிறிலங்காவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதை தடை செய்யப் போவதாக, ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதுகுறித்துப் பேசுவதற்காக, சிறிலங்கா அமைச்சர் சரத் அமுனுகம பிரசெல்ஸ் செல்லவுள்ளார்.

எரிபொருள்களின் விலை திடீரென குறைப்பு – மகிந்தவின் அடுத்த தேர்தல் குண்டு

சிறிலங்காவில் அதிபர் தேர்தலுக்கு இன்னமும் ஒரு மாதமே உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு தொடக்கம் எரிபொருள்களின் விலை, சிறிலங்கா அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.