மேலும்

நாள்: 4th December 2014

‘உள்நாட்டுப் போர் முடிவடைந்ததானது மகிழ்ச்சி ஆனால் சுதந்திரம் இன்னமும் எட்டப்படவில்லை’

யார் ஆட்சிக்கு வந்தாலும் தமது பிரச்சினைகளில் மாற்றம் ஏற்படாது என வடக்கில் வாழும் தமிழ் மக்கள் கருதுகின்றனர். உள்நாட்டுப் போர் முடிவடைந்ததானது தமக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற போதிலும், தமக்கான சுதந்திரம் இன்னமும் எட்டப்படவில்லை என வடக்கில் வாழும் தமிழ் மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

புலிகளின் புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினர் நெடியவன் கைது

திருகோணமலை, சாம்பல்தீவில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவரை கைது செய்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

தேர்தலைக் கண்காணிக்க மூன்று அனைத்துலக அமைப்புகளுக்கு அழைப்பு

அடுத்தமாதம் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்க மூன்று அனைத்துலக கண்காணிப்புக் குழுக்களுக்கு சிறிலங்கா தேர்தல் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

அமைச்சரவை மாற்றம், வரவுசெலவுத் திட்டம்: பரபரப்பான சூழலில் கூடுகிறது வடக்கு மாகாணசபை

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலும் – அமைச்சரவைப் பொறுப்புக்களில் சில மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக பேசப்படுகின்ற நிலையிலும் வடக்கு மாகாணசபையின் அமர்வு இன்று காலை இடம்பெறவுள்ளது.

“ஜனவரி 8க்குப் பின்னரும் நானே சிறிலங்கா அதிபர்” – என்கிறார் மகிந்த

வரும் ஜனவரி 8ம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்குப் பின்னரும் தானே சிறிலங்கா அதிபராகத் தொடர்ந்து நீடிப்பேன் என்று தெரிவித்துள்ளார் மகிந்த ராஜபக்ச.

அதிபர் தேர்தல்: கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் பொது நிலைப்பாட்டை எடுக்க முடிவு?

அடுத்தமாதம் சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், பொதுவான ஒரே நிலைப்பாட்டை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கில் இருந்து இன்று அலரி மாளிகைக்கு நான்கு தொடருந்துகள்

வடக்கில் இருந்து, நான்கு தொடருந்துகளில் 1960 தமிழ்மக்களை அலரி மாளிகைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.