மேலும்

நாள்: 7th December 2014

வேட்புமனுவில் கையெழுத்திட்டார் மைத்திரி – 19 வேட்பாளர்கள் போட்டி

சிறிலங்காவில் வரும் ஜனவரி 8ம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக 19 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக, தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போர் வெற்றி மகிந்தவுக்கு மட்டுமே சொந்தம் – ஹெல உறுமயவுக்கு கோத்தா பதிலடி

இறுதிக்கட்டப் போருக்கு சிறிலங்கா அதிபருக்கு அழுத்தம் கொடுத்தது தாமே என்ற ஜாதிக ஹெல உறுமயவின் உரிமை கோரலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

ரிசாத் பதியுதீனை ‘கறிவேப்பிலை’ என்கிறது பொது பல சேனா

அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீனை கறிவேப்பிலை என்று வர்ணித்துள்ளார் பொது பல சேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரர்.

டோவலின் வெளிவராத கொழும்பு சந்திப்பு இரகசியங்கள் – ஆங்கில வாரஇதழ்

சிறிலங்காவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளின் முன்னேற்றம் குறித்து, இந்தியா மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், தேர்தல் காலத்தில் தமிழர்களின் பாதுகாப்பு விடயத்திலும் புதுடெல்லி கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

சிறிலங்கா: எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவால் அறநெறி சார்ந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியுமா?

சந்திரிகா குமாரதுங்க மற்றும் ராஜபக்ச அரசாங்கங்களின் கீழ் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக சிறிசேன அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். இவர் இந்த அரசாங்கங்களால் தொழிலாளர்களின் சமூக உரிமைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல்களுக்கும் குற்றங்களுக்கும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வக்கிரமான இனவாதப் போருக்கு ஆதரவாகச் செயற்பட்டுள்ளார்.

அரசியல் பொறியில் விழவேண்டாம் – கத்தோலிக்க மதகுருக்கள் பாப்பரசரிடம் கோரிக்கை

பாப்பரசர் பிரான்சிசின் சிறிலங்கா பயணத்தை பிற்போடுமாறு சில கத்தோலிக்க மதகுருக்களும், சாதாரண மக்களும் கோரிக்கை விடுத்துள்ளதாக, ஏபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

எதிரணியின் பரப்புரையை முடக்கும் சிறிலங்கா அரசின் புதிய தந்திரோபாயம்

கொழும்பிலும் ஏனைய முக்கிய இடங்களிலும், எதிரணியினால் பெரியளவிலான பரப்புரைக் கூட்டங்களை நடத்த முடியாத வகையில், சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பீல்ட் மார்சல் பட்டமும், பாதுகாப்பு அமைச்சர் பதவியும் – சரத் பொன்சேகாவின் பேரம்

பீல்ட் மார்சல் பட்டமும், பாதுகாப்பு அமைச்சர் பதவியும் தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சரத் பொன்சேகா ஆதரவு அளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டமைப்பை மைத்திரி பக்கம் இழுக்க எதிரணி தீவிர முயற்சி

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக, மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக முன்னிறுத்தியுள்ள எதிரணியின் சார்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அதிகாரபூர்வமற்ற பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளில் பணியாற்றும் சிறிலங்கா இராஜதந்திரிகள் கொழும்புக்கு அழைப்பு

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, வெளிநாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் சிலர் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.