மேலும்

நாள்: 8th December 2014

எதிரணிக்குப் பாய்ந்தார் ஹிருணிகா

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிறேமச்சந்திர, எதிரணியுடன் இணைந்து, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

அரசுப் பக்கம் தாவவில்லை – சந்திராணி பண்டார மறுப்பு

திஸ்ஸ அத்தநாயக்கவுடன் ஆளும்கட்சிக்குத் தாவியதாக வெளியான செய்திகளை, ஐதேகவின் அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார, மறுத்துள்ளார்.

ஐதேகவின் புதிய பொதுச்செயலர் கபீர் காசிம்

ஐதேகவின்  புதிய பொதுச்செயலராக கபீர் காசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஐதேகவின் பொதுச்செயலாக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க, அரசதரப்புக்குத் தாவியதையடுத்தே, இந்த நியமனம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

19 வேட்பாளர்கள் போட்டியிடும் சிறிலங்கா அதிபர் தேர்தல்

அடுத்தமாதம் 8ம் நாள் நடைபெறும் சிறிலங்கா அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 19 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக, சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 

ஐதேகவின் வலையிலும் ‘பெரியமீன்’ சிக்கியது?

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிறேமச்சந்திர இன்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் செய்திகள் அடிபடுகின்றன.

சிறிலங்காவில் சீனாவின் உறவைப் பலப்படுத்தும் ‘நீர் வழங்கல் திட்டம்’

சீனா தனது ‘மென்மையான அதிகாரத்தைப்’ பயன்படுத்தி கொழும்புடன் தனது உறவை மேலும் ஆழமாக்குவதற்காக தற்போது சிறிலங்காவில் மிகப் பெரிய நீர் வழங்கல் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

சந்திராணியுடன் ஆளும்கட்சிக்குத் தாவினார் திஸ்ஸ அத்தநாயக்க

ஐதேக பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். (படங்களுடன் 3ம் இணைப்பு)

மகிந்தவுக்கு எதிராக அடுத்தகட்டப் போரைத் துவக்கினார் சந்திரிகா

மைத்திரிபால சிறிசேனவை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்குள் இருந்து வெளியே கொண்டு வந்து, எதிரணியின் பொதுவேட்பாளராக நிறுத்திய சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தனது போரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளார்.

மைத்திரியை இன்று நேரில் சந்திக்கிறார் மகிந்த

அரசாங்கத்துக்குள் இருந்து வெளியேறிய பின்னர், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், எதிரணியின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவும், இன்று முதல் முறையாக நேருக்குநேர் சந்தித்துப் கொள்ளவுள்ளனர்.

கேபியை விசாரிக்க அனைத்துலக காவல்துறையின் உதவியை நாடுகிறது சிபிஐ

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்துவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காத நிலையில், இந்திய மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) அனைத்துலக காவல்துறையின் உதவியை நாடியுள்ளது.