மேலும்

மாதம்: January 2015

நாமல், சஜின் பயன்படுத்திய ஆடம்பர சொகுசுப் பேருந்துகள் சிக்கின

கொமன்வெல்த் மாநாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்சவினாலும், சஜின் வாஸ் குணவர்த்தனவினாலும் பயன்படுத்தப்பட்டு வந்த இரண்டு ஆடம்பர சொகுசு பேருந்துகள், மீட்கப்பட்டுள்ளன.

அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரம் – தமிழ்நாட்டின் எதிர்ப்பையும் மீறி புதுடெல்லியில் பேச்சு

தமிழ்நாடு அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், இலங்கைத் தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக இந்திய- சிறிலங்கா அரசாங்கங்களுக்கு இடையிலான பேச்சுக்கள் நேற்று புதுடெல்லியில் நடைபெற்றுள்ளன.

அரசாங்கத்தில் இருந்து இருந்து விலகுவோம் – ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை

முன்னைய ஆட்சியில் கொலைகள், கொள்ளைகள், ஊழல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், தற்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகி விடுவோம் என்று ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.

சிறிலங்காவில் ஆட்சி மாறினாலும் பிரித்தானிய நிலைப்பாடு மாறாது – ஹியூகோ ஸ்வையர்

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், சிறிலங்கா தொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இரு பிரதேச சபைகளுக்கு பெப்ரவரி 28ம் நாள் தேர்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பிரதேச சபைகளுக்கு அடுத்த மாதம் 28ம் நாள் தேர்தல் நடத்தப்படும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

நாளை மறுநாள் கொழும்பு வரும் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணமும் செல்வார்

மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் நாளை மறுநாள் சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.

பதவியேற்றார் சிறீபவன் – பிரதம நீதியரசரான மூன்றாவது தமிழர்

சிறிலங்கா உயர்நீதிமன்றத்தின் 44வது பிரதம நீதியரசராக கனகசபாபதி சிறீபவன் இன்று மாலை , சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பொறுப்பேற்றுள்ளார்.

அதிகாலையில் அலரி மாளிகையில் இருந்தார் மொகான் பீரிஸ் – நேரில் கண்டதை ரணில் விபரிப்பு

அதிபர் தேர்தலுக்கு மறுநாள் அதிகாலையில் தான் அலரி மாளிகைக்குச் சென்ற போது, அங்கு பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் நின்றிருந்ததாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் உள்நாட்டு விசாரணை – சிறிலங்கா திட்டம்

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்க, புதிதாக உள்நாட்டு விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புதிய அரசின் கொள்கைகளை ஜெனிவாவுக்கு விளக்கினார் ஜயந்த தனபால- தொடர்ந்து பேச இணக்கம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வெளிவிவகார ஆலோசகர் ஜயந்த தனபால நேற்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.