மேலும்

நாள்: 28th December 2014

தாய்வான் கண்காணிப்பாளர்களுக்கு சிறிலங்கா தடை

சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில், தாய்வான் நாட்டவர்களை ஈடுபடுத்துவதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தடை விதித்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரி பக்கம் தாவியது ஏன்? – அமைச்சர் சுசில் விளக்கம்

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கத்துக்கு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாவியதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று சிறிலங்கா அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் கூடாரத்தில் இருந்து முஸ்லிம் காங்கிரசும் வெளியேறியது

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இருந்து, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியுள்ளது.

புதிய அரசியலமைப்பை உருவாக்கமாட்டாராம் மைத்திரி

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளமாட்டார். நடைமுறையிலுள்ள அரசியலமைப்பிலேயே அவரால் திருத்தங்களைச் செய்ய முடியும் என மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் தேர்தல் 2015: தமிழ் மக்களுக்கு நன்மையான தெரிவு எது?

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் முன்னால் மூன்று தெரிவுகள்தான் உண்டு. ஒன்று மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பது. இரண்டு, மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது. மூன்று இருவரையும் நிராகரிப்பது. இதில் எது தமிழ் மக்களுக்கு நன்மையான முடிவாக இருக்க முடியும்? ராஜபக்சவை ஆதரித்தல் என்பது தமிழர் மனச்சாட்சிக்கு பொருந்தாத ஒன்று. எனவே முதலாவது தெரிவு குறித்து விவாதிப்பதில் பொருளில்லை – யதீந்திரா.