மேலும்

Archives

தப்பியோடிய சிறிலங்கா இராணுவத்தின் முத்த அதிகாரிகள் கொழும்பு திரும்புகின்றனர்

சிறிலங்காவை விட்டுத் தப்பிச் சென்று வெளிநாடுகளில் வசித்து வந்த, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமான – இரண்டு மூத்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் நேற்று நாடு திரும்பியுள்ளனர்.

6 ஆயிரம் ரூபாவுடன் நடந்த மைத்திரியின் பதவியேற்பு – படங்களுடன் செய்தித்துளிகள்

கொழும்பில் நேற்று மாலை நடந்த புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவியேற்பு விழா மிகவும் எளிமையான முறையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறிலங்கா அதிபராக மைத்திரி, பிரதமராக ரணில் பதவியேற்றனர்

சிறிலங்காவின் புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும், இன்று மாலை 6.21 மணியளவில்  பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

அமைச்சர்கள், பணியாளர்களிடம் விடைபெற்று மெதமுலானவுக்குச் சென்றார் மகிந்த

அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து இன்று காலையில் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்ச, தனது சொந்த ஊரான மெதமுலானவுக்குச் சென்றுள்ளார்.

வடக்கு, கிழக்கை பிரித்த எஸ்.எல்.குணசேகர மரணம்

சிங்கள பௌத்த கடும்போக்காளரும், சிறிலங்காவின் அரசியலமைப்பு சட்ட நிபுணருமான எஸ்.எல்.குணசேகர உடல்நலக் குறைவினால் இன்று மரணமானார்.

வாக்களிப்பு தெற்கில் படுவேகம்; வடக்கு, கிழக்கில் மந்தம்

சிறிலங்காவில் நடந்து வரும் அதிபர் தேர்தலில் நண்பகல் வரை நாட்டின் பல இடங்களில் வாக்களிப்பு வீதம் 50 வீதத்தை தாண்டி விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாக்களிப்பின் போது தேர்தல் விதிமுறையை மீறிய மகிந்த குடும்பம்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மெதமுலானவில் தனது குடும்பத்தினருடன் வாக்களிக்கச் சென்றிருந்த போது, தேர்தல் ஆணையாளரின் உத்தரவை மீறி, ஒளிப்படம் எடுத்துக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விறுவிறுப்பாக நடக்கிறது வாக்களிப்பு – மகிந்தவும் வாக்களித்தார்

சிறிலங்காவில் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டுக்கு அகதியாக சென்ற 5 தமிழர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அகதிகளாக தமிழ்நாட்டைச் வந்தடைந்த ஐந்து இலங்கைத் தமிழர்களுக்குஉள்ளூர் நீதிமன்றத்தினால் தலா இரண்டு ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை வாக்கு எண்ணும் பணி தாமதமாகும் – தேர்தல் ஆணையாளர்

சிறிலங்காவில் நாளை தேர்தல் முடிந்தவுடன், வாக்கு எண்ணும் பணி முன்னர் திட்டமிட்டவாறு மாலை 6 மணிக்கு ஆரம்பமாகாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.