மேலும்

நாள்: 10th August 2026

அடுத்தவாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது 22வது திருத்தச் சட்டமூலம்

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் வகையிலான,  22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் 18ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பி்க்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் எதிர்க்கட்சி

உயர்நீதிமன்றம்  மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்களைக் கோரும்,  22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து  ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடி வருகிறது.