22வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல்
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து, ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா சட்டத்தரணிகள் சங்கம் என்பன உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து, ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா சட்டத்தரணிகள் சங்கம் என்பன உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கிலான, அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலம், மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் ஆகியன இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
1979-ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” என்ற தலைப்பிலான புதிய சட்டமூலத்தை வெளியிடுவதற்கும், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.