சிறிலங்காவில் இருந்து விடைபெறும் சீனத் தூதுவர்- மகாநாயக்கர்களிடம் ஆசி பெற்றார்
சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் பதவியிலிருந்து விலகிச் செல்லும், கீ சென்ஹொங், மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் பதவியிலிருந்து விலகிச் செல்லும், கீ சென்ஹொங், மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
பௌத்த பிக்குகள் எதிர்கொள்ளும் அநீதிகள், புத்தசாசனம், நாட்டின் நிலை குறித்து ஆராய்வதற்காக அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள சங்க மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என இரண்டு பௌத்த பீடங்கள் அறிவித்துள்ளன.
கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் மிகவும் மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த அதிகாரியான தர்மபால கம்மன்பிலவை, கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க வலியுறுத்தி, மகாநாயக்க தேரர்கள் கூட்டாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஒற்றையாட்சிக்கு விரோதமான கொள்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பின்பற்றுவதைத் தடுக்க, மகாநாயக்கர்களை தலையீடு செய்யுமாறு, போர்வீரர்கள் மற்றும் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்கான அமைப்புகளின் கூட்டமைப்பு, கோரியுள்ளது.
பதவியில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள், மீண்டும் தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளுமாறும், நாட்டு மக்களுக்கான கடமையை நிறைவேற்றுமாறும், மூன்று பௌத்த பீடங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.
ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான சிறிலங்காவின் போருக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பாக மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் குழு, மாகாண சபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படாது என்றும் உறுதியளித்துள்ளது.
இன்னொரு ஹிட்லராக மாறி நாட்டை முன்னேற்றுவதற்கு கோத்தாபய ராஜபக்ச முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரான, வண.வென்டருவே உபாலி தேரர்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டியில் நேற்று அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுடன் மூடிய அறைக்குள் இரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களும், இரு பீடங்களின் காரக சங்க சபாவின் கூட்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்குப் பின்னால் இருப்பதாக அஸ்கிரிய பீடத்தின், செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.