வடக்கில் படைகளைக் குறைக்கவில்லை – ஒப்புக்கொள்கிறார் சிறிலங்கா இராணுவத் தளபதி
வடக்கில் இருந்து இராணுவமுகாம்கள் எதுவும் அகற்றப்படவில்லை என்றும், நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலையெடுப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும் உறுதி அளித்துள்ளார் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா.
